பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

க.சமுத்திரம் 0



பேசிக் கொண்டே போன கண்ணப்பன் அவர்களை இடைமறித்து, தனக்கும் கோவில் விவரம் தெரியும் என்பது போல் எஸ்.டி.எஸ். பேசினார். 'செம்பியம்மாதேவி திருப் பணி செய்த திருவையாறு தேரைவிட, மிகப் பெரிய தேர் செய்ய வேண்டும்-சரி-மற்ற அமைச்சர்களும், தத்தம் கருத்துக்களை உருப்படியாய் சொல்லலாம்...'

'நெல்லைக்கு அருகே உள்ள கிருஷ்ணபுரத்துச் சிலைகள் மாதிரி நம் காவல் தெய்வத்திற்கு கருவறையில் சிலைவைக்க வேண்டும் என்றார் அமைச்சர் நடேசன் பால்ராஜ்.

மீரான் அவர்கள், நெல்லையின் மேற்கு மூலைக்கு பிரதிநிதியானார்.

'திருக்குற்றாலத்தில் உள்ள சித்திரக்கூடம் மாதிரி ஒரு கூடம் அமைத்து, அம்மையின் அவதார அற்புதங்களை தீட்ட வேண்டும். குறிப்பாக மகிஷாசுர வதம்...

ஏதோ பேசப் போன ஆர்.எம்.வீ.அவர்கள், தலைமைத் தொங்கப் போட்டுக் கொள்ள, 'நாட்டுக் கோட்டை ரகுபதி அவர்கள் இப்படிச் சொன்னார்.

'பிள்ளையார் பட்டி விநாயகர் கோவிலின் கருவறைக்கு ஈசான மூலையில் பிள்ளையார் பெருமானின் வண்ண ஒவியம் உள்ளது. அதை எந்தப் பக்கத்தில் இருந்து பார்த் தாலும், பிள்ளையார் நம்மையே பார்ப்பது போல் தோன்றும்... அம்மாவுக்கும் அப்படி ஒரு ஓவியம் படைக்க வேண்டும்.

நடேசன் பால்ராஜ் மீண்டும் பேசினார்.

'அம்மா என்றதும், அம்மாவின் அருளாலேயே ஒன்று வருகிறது. இனிமேல் அம்மா என்ற சொல், புரட்சித்