❍ ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்
35
தெய்வத்தை மட்டுமே குறிக்கும் சொல்லாக இருக்க வேண்டும்... ஆனால், மேல் மருவத்துர் ஆதி பராசக்தி தொண்டரான பங்காரு அடிகளை, செவ்வாடைத் தொண் டர்கள், அம்மா என்று சும்மா சும்மா அழைக்கிறார்கள். இனிமேல் தன்னை அப்படி அழைக்கக் கூடாது என்று அடிகளார், தம் தொண்டர்களுக்கு ஆணையிட வேண்டும் என்று நான் உத்திரவு இடப் போகிறேன். சொல்வதைக் கேட்காவிட்டால், ஆலயத்தை அறநிலையத் துறை எடுத்துக் கொள்ளும் என்றும் மிரட்டப் போகிறேன்.”
வனத் துறை அமைச்சர் லாரன்ஸ், அந்த யோசனைக்கு கைதட்டிவிட்டு, தன் பங்குக்கு ஒரு சாதனை படைக்கப் போவதைச் சொன்னார்.
வண்டலூரில் இருந்து இரண்டு நிஜச் சிங்கங்களை, சிங்க வாகினியான நம் அம்மனின் திருச்சிலைக்கு முன்னால் நிறுத்தி விடுகிறேன்...
பக்திமானான அமைச்சர் துரைச்சாமி, 'ஆகமத்திற்கு" வந்தார்.
'கோவில், ஆகம விதிப்படித் தான் அமைய வேண்டும். ஆகையால், கருவறையின் வெளிச் சுற்றின் இடது பக்கம் தட்சிணாமூர்த்தி இருக்க வேண்டும்... புரட்சித் தலைவர் வடிவத்தில் ஒரு சிலையை வடித்து...
அதுவரைசும்மாஇருந்த அமைச்சர் கே.ஏ.கே., இப்போது சூடுபட்ட பூனையாய் கத்தினார்.
"கூடாது-கூடாது; இந்த மானுட தட்சிணாமூர்த்திகடைசிக் காலத்தில், தனது பரிவாரத் தேவதைகளை நம் தெய்வநாயகியிடம் பேசலாகாது என்று ஆணையிட்டவர்,