பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும் 49

"நம்ம நாட்டை நோயாளியாக்க... பாகிஸ்தான்... எய்ட்ஸ் நோயாளிகளை இந்தியாவுக்கு அனுப்புறதுக்கு திட்ட மிட்டிருப்பதாய் பேப்பர்ல வந்த நியூஸ் படித்தியா... அந்த பாகிஸ்தானுக்கும்... இவனுகளுக்கும் என்ன வித்தியாசம்... சொல்லுடி..."

அப்பாவுக்கு பதிலாய் 'அடி' போட்டுவிட்டால், கணவர் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டார் என்பதை புரிந்து கொண்ட ஆனந்தம்மா, சலனமற்ற குரலில் முறையிட்டாள்.

"உடம்புல.. ஆயிரத்தெட்டு நோய் வச்சிருக்கிங்களே... பிளட் பிரஷ்ஷர், டயா பெடிக்ஸ்... இஸ்- கிமியான்னு மொதல்ல மருந்து மாத்திரைகளை விழுங்கிட்டுப் போங்க!"

"இதோ... ஒரு நொடில வந்துடுறேன்... இரண்டுல ஒன்றைப் பார்க்கும் முன்னால... எனக்குள்ளே எந்த மாத்திரையும் வேலை செய்யாதுப்பா..."

பழனிச்சாமி, ஸ்கூட்டரை விட்டார். அறுபது கிலோ மீட்டர் பாய்ச்சல்... அந்த ஏரியாவைத் தாண்டுவது வரைக்கும், கண்ணில் பட்ட அத்தனை பேரையும், அனுதாபத்தோடு பார்த்தார். இடையிடையே கும்பல் உள்ள இடமெங்கும் வண்டியை நிறுத்தி, சாக்கடைக் கலப்பு பற்றி விவரம் சொன்னார்.

பழனிச்சாமி, ஒரு மஞ்சள் லைட்டின் உதவியோடு, ஒரு சின்னத் தப்பை செய்துவிட்டார். இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு வந்தபிறகு, சிக்னலில், பச்சை விளக்கு மஞ்சளானபோது, 'கிராஸ்' செய்தார்; ஆனால், அடுத்த சாலைக்கு போகுமுன்பே, சிவப்பு விளக்கு வந்துவிட்டது. இதற்கென்றே, எதிர்பார்ப்போடு, மோட்டார் பைக்கில்