❍ ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்
51
விட்டார்கள். போலீஸார், இப்போது தனித்து விடப்பட்ட பழனிச்சாமியை, ஏற இறங்க பார்த்தார்கள்...ஆசாமி கிராக்கு...அதோட ஊருக்கு புதுசு...ஆகவே பழசாக்கணும்...
"ஸார்...கேஸ் எழுதிட்டு என்னை விடுங்க ஸார்"...
"அது எங்களுக்கும் தெரியும் ஸார்...இப்போ போக்குவரத்து நெருக்கடில நாங்க பிஸ்ஸி ஸார்...அப்புறம் ஒங்க வெஹிக்கிளையும் செக்கப் பண்ணணும்... ஒர்க்ஷாப்புக்கு கொண்டு போகணும்...வெயிட் பண்ணுங்க ஸார்...”
பழனிச்சாமியால், எதுவும் செய்ய முடியவில்லை... அந்த வெள்ளையூனிபாரம்கள், ஒரு மணல் லாரியை கோபத்தோடு மடக்கி, சிரித்தபடியே விடுவதையும், கோணிக்கட்டை கேரியரில் வைத்திருந்த ஒரு அன்னக்காவடி சைக்கிள்காரரை, தலையில் ஒரு தட்டுத் தட்டிவிட்டு, சைக்கிள் டயர்களின் மூச்சைப் பிரிப்பதையும் பார்ப்பதைத் தவிர, வேற வழியில்லை...ஆனாலும், அவரால் பொறுக்க முடிய வில்லை. நேராக, 'பஞ்சராக்கியவர்களிடம்' போய், உபதேசித்தார்.
"சைக்கிள்காரர் கையுல காசு இல்ல என்கிறதுக்காக இப்படி அடாவடி செய்யுறது நியாயமா ஸார்... இதனாலதான்...ஏழை எளியவங்ககிட்ட ரவுடி மாதிரி நடக்கிற ...ஒங்களை அடக்குறதுக்கு மக்கள் சூப்பர் ரவுடிகளை தேர்ந்தெடுக்காங்க...அப்புறம்-கேஸ் எழுதிட்டு... என்னை போக விடுங்க"...
"நீங்க...நினைக்கிற மாதிரி...இது மாமியார் வீடுல்ல... நில்லுன்னா...நின்னுதான் ஆகணும்... இந்தாப்பா...அந்த