❍ ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்
53
ஹலோ... ஹலோ... லைன் கட்டாயிட்டே..."
மீண்டும் டெலிபோன் செய்யப்போன பழனிச்சாமி, யோசித்தார். இந்த 'பி.ஏ.க்களே' இப்படித்தான்... பரமசிவன் கழுத்தில் கிடக்குற பாம்பு மாதிரி... அந்த பரமசிவத்தையே, நேர்ல பாத்துடலாம்... இந்த லஞ்சத்தை எரிச்சுட மாட்டாரா..."
பழனிச்சாமி, அந்த டெலிபோன் பெண்ணிடம், ஒரு பத்து ரூபாய் நோட்டை நீட்டினார். அவள் ஐந்து ரூபாயை நீட்டி விட்டு, எழுந்தாள். பழனிச்சாமி படபடப்பாய் கேட்டார்.
"என்னம்மா இது... லோகல் கால் ஒரு ரூபாய்தானே... இப்படி வசூலிக்கணுமுன்னு தானே... கவர்மெண்ட் ஒங்களுக்கு டெலிபோன் கொடுத்திருக்கு..."
"இந்த சட்டமெல்லாம் வேண்டாம்... எங்க பூத்தில... ஒரு கால்... இரண்டு நிமிஷம் வரை இரண்டரை ரூபாய்... நீங்க அஞ்சு நிமிஷம் பேசி இருக்கீங்க... போனால் போகுதுன்னு ஒரு நிமிஷம் ஒங்களுக்கு போனஸ்... என்ன மணி... கொஞ்சம் சீக்கிரம் வரப் படாது?..."
"இந்தாம்மா... மரியாதையா நாலு ரூபாயக் கொடு. நாட்டுக்காக ராஜீவ் காந்தி கண்ட நல்ல கனவுல இது முக்கியமானது... அதுல கொள்ளை அடிக்காதே... சரி... நாலு ரூபாய எடு... நான் ரெண்டு நிமிஷத்துக்கு மேல பேசல... பணம் தராட்டால்... டெலிபோன் டிபார்ட்மெண்ட்ல கம்ளெயின்ட் செய்வேன்..."
அந்த இளம்பெண், தூக்கக் கலக்கத்தில், 'கொண்டவனையும்', டூட்டி மாற்ற வந்தவனையும் பார்த்தாள். அதையே காதலின் போதைப் பார்வையாக