பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும் 55

சூட்கேஸ் கண்ணுல படாது. சூடுதான்படும்"

"போலீஸ்ல புகார் செய்தால் என்ன ஆகும் தெரியுமா?"

"மவராசனா அதை செய்யா... இந்த ஆட்டோவே... ஒரு போலீஸ்காரருக்கு சொந்தம். பெரிய மனுஷனாச்சேன்னு பாக்கேன்... இல்லாக்காட்டி... நடக்கிறதே வேற... ஜேப்பில கை போடும்மா... நானு பிஸ்ஸி..."

பழனிச்சாமிக்கு, அந்த ஆட்டோக்கார இளைஞனிடம் சண்டை போட விருப்பமில்லை... இது குறித்தும், கிளாஸ்மேட்டான நவரத்தினத்திடம் விரிவாய் விவாதிக்கலாம் என்று நினைத்து, கேட்ட பணத்தை, மீண்டும் கேட்கப்படும் முன்னாலே கொடுத்துவிட்டு, கமிஷனர் ஆபீஸ் வளாகத்திற்குள் வந்தார். நவரத்தினத்தின் அறையைத் தேடிக் கண்டுபிடித்து, தள்ளுக் கதவை தள்ளியபடியே துள்ளிப் பாய்ந்தவரை, நந்தியான பி.ஏ., கண்களை, கொம்புகள் போல் நீட்டி முட்டப்போனது.

"என்பேருதான் பழனிச்சாமி... ஒங்களிடம் டெலிபோன்ல..."

"தெரியும்... வெயிட் பண்ணுங்க"

அந்த பி.ஏ.க்காரரிடம் பழனிச்சாமி, தனது விசிட்டிங் கார்டை கேளாமலே கொடுத்தார். கால் மணி நேரம் கழித்து உள்ளே போன பி.ஏ. அரை மணி நேரம் கழித்து வெளியே வந்தார். நண்பர் நவரத்தினம், அறைக்கு வெளியே வந்து, தன்னை ஆரத் தழுவுவார் என்று எதிர்பார்த்த பழனிச்சாமி, தனது அதிர்ச்சியை உள்வாங்கிக் கொண்டு, அந்த பி.ஏ.வை