பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56 சு.சமுத்திரம்

நெருங்கியபோது, அது "வெயிட் ப்ளீஸ்" என்றது கடுகடுப்பாய்... இவ்வளவுக்கும் பெண் பி.ஏ...

பழனிச்சாமி காத்திருந்தார். காத்திருந்தார். நிமிடங்கள், மணிகளாயின. பகல் இரண்டு மணி அளவில், நவரத்தினமே வெளிப்பட்டார். இவரைப்பார்த்து 'எஸ்'... என்று இழுத்தார். நான்... பழனிச்சாமி. ஒன்னோட... ஸாரி... ஒங்களோட கிளாஸ்மேட்..."

“என்ன வேணும் சொல்லுங்க..." 'ஒங்க டிராபிக் போலீஸ் பகல் நேரத்திலேயே பண வேட்டை நடத்துறாங்க... ஆட்டோக்காரங்க மக்களுக்கு சூடு போடுறாங்க... இதைப் பற்றி ஒங்க கிட்ட விரிவாய் பேசணுமுன்னு...'

"லுக் மிஸ்டர்... பழனிச்சாமி... நீங்க... 'பிரியா இருக்கலாம்... ஆனால் நான் அப்படி இல்ல... இவ்வளவு வயசாகியும் நீங்க வளராமலே இருக்கீங்க... அப்போ காலேஜ்லதான் ரேகிங் செய்யப்படாது... பொண்ணுகள... கலாட்டா செய்யப்படாதுன்னு வம்புக்கு வருவீங்க... இன்னும் அந்தப் புத்தி போகலியா... ஓ.கே... பஸ்ட் அண்ட் லாஸ்ட்..., ஒங்களுக்கு... ஏதாவது போலீஸ் பிரச்சினை இருந்தால் சொல்லுங்க... ஊரைச் சுற்றி... தோரணம் கட்டுற வேலை வேண்டாம்... ஓ..கே... என்ன வேணும். பழனி... ஐ அம் பிஸ்ஸி.."

"எனக்குன்னு ஒண்ணுமில்ல நவரத்தினம்; கர்த்தர் ஒன்னையும் இரட்சிப்பாராக..."

பழனிச்சாமி, திக்கித் திணறி, தட்டுத் தடுமாறி, வெளியே வந்தார். 'சட்டை நுனியால், கண்களைத் துடைத்துக் கொண்டார். அந்த வளாகத்தை விட்டு வெளியேறி, பிரதான