பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



0 ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்

59/b>

வில்லை... கோர்ட்டே சிறை வைக்கப்பட்டிருப்பது போல் தோன்றும் பாடாதி தரையையோ.. பத்தாம் பசலி மேஜையையோ பார்க்க முடியவில்லை. மாறாக கடப்பாக்கல் தளம். ஒடுகிற சுவர்க் கடிக்காரம். சுற்றுகிற மின்விசிறி.

அந்த வளாகத்திலும், அந்த மன்றத்திலும் இருப்பவை கண்ணில்பட, இல்லாதவை கருத்தில்பட, பராக்குப் பார்த்தப்படியே நடந்த கடல்மணி பார்த்து அண்ணார்ச்சி’ என்ற குரல் கேட்டு, நிமிர்ந்தார். நிமிர்ந்த வரை, ஏற இறங்கப் பார்த்தபடியே, சீனிவாசன் சிரித்தபடியே சீண்டினார். ‘என்றைக்கும். பார்த்து நடக்கணும் அண்ணாச்சி.. இல்லாட்டால்.. இப்படித்தான் முட்டிக்கணும்...'

கடல்மணி, அந்த சீனிவாசனை, பாதாதிகேசமாய் பார்த்தார். 'உருவு கண்டு எள்ளாமை வேண்டும்’ என்பது போல் 'உருவு கண்டு நம்பாமை வேண்டும்’ என்ற புதிய பழமொழிக்கு, அவர் வார்த்தைகளாகத் தோன்றினார். கடந்த நான்கு நாட்களில் கன்னச் சதையிழந்து, கண்ணில் ஒளி இழந்து, கால்கள் வில்லாய் வளைய நின்ற இந்த கடல்மணியைப் பார்த்து, சீனிவாசன் உப்பிப்போன கன்னங்களை, மேலும் உப்ப வைத்தார். தலை நரையை மறைக்கும் கறுப்புச் சாய முடியை தடவி விட்டபடியே கேட்டார்.

‘என்னை எதுக்காக அண்ணாச்சி முட்டுறீங்க.."

'முட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டால்.. முட்டத் தானே செய்யணும்..'அதோட கழுதையாகமலே. குட்டிச் சுவரை முட்ட வேண்டியதாயிற்று பிரதர்."