உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

சு.சமுத்திரம் ❍

'நீங்க...முட்டிக்கிறது குட்டிச் சுவர் இல்ல.. காங்கீரிட் கட்டிடம்.'

'நான் கட்டிடத்துல மோதல.. அதுல தேங்கிப்போன சாக்கடைக் குழாயிைத்தான் திறக்கேன்.

'இதனால.. நீங்கதான் அசுத்தமாவிங்க அண்ணாச்சி..'

'நான். அசுத்தப்பட்டாவது.. கட்டிடம் சுத்தப்படட்டும்..” 'கட்டிடமே.. ஒங்களுக்கு இல்லன்னு ஆகும்போது.”

'அப்படிச் சொல்றவன்...என்னை மாதிரி இன்னொரு வேலைக்காரன். வீட்டுக்காரன் இல்ல."

எரிந்த கட்சியாகக் கடல்மணியும், எரியாத கட்சியாக சீனிவாசனும், லாவணி போட்டுக் கொண்டிருந்தபோது, உயரத்தில் வித்தியாசப் படாமல், அகலத்திலும், வயதிலும் வித்தியாசப்பட்ட இரண்டுபேர், சீனிவாசனின் இருபக்கமும் நின்று கொண்டார்கள். இவர்களில் வயிறு துருத்தியவர் நிர்வாக அதிகாரி. கண்கள்துருத்தியவர் அலுவலக ஜூனியர் அnஸ்டெண்ட். இந்த இருவருமே முந்தாநாள்வரை இந்தக் கடல்மணிக்கு சலூட் அடித்தவர் லுவலகத் தலைவரான சீனிவாசனுக்குக் கூட போடாத ம.பரிய கும்பிடு போட்ட வர்கள். ஆனால் இப்போதோ, நிர்வாக அதிகாரி..அவரை பாராததுபோல் அலட்சியமாக நிற்கிறார். அஸிஸ்டெண்ட் இளைஞன் அவரை பார்க்கிறான். பகையாளியைப் பார்ப்பதுபோல்..

கடல்மணி, சீனிவாசனை விட்டுவிட்டு, அவர்களைப் பார்த்தார். மனம்குமுறி, கண் திமிறிப் பார்த்தார். இதே இந்த இரண்டு பேர்வழிகளும், கடல்மணியின் அறைக்குள்