உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்

75

"ஐயா நீங்க தான்கடைக்குச் சொந்தரக்காரரா?" "ஆமாங்க... ஐயா யாருங்க...' 'என்னை ஏ.சி.டி.ஓ. அதாவது அசிஸ்டெண்ட்கமர்சியல் ஆபீஸர்னு சொல்லுவாங்க. ஐயா எனக்கு மேலதிகாரி.சுருக்கமாய் சொல்லப்போனால் நாங்க வரி ஆபீஸருங்க...' 'அப்படிங்களா..சந்தோஷம்..இப்படி முதல்லயே சொல்லியிருந்தால் வருத்தப்படற மாதிரி வராது பாருங்க... என்ன சார் வேணும்..?" 'பெருசா ஒண்ணுமில்ல..இந்தபைகளை வாங்குனதுக்கு ரசீதுகள் வேணும். ஒருநாளைக்கு எவ்வளவு விக்குதுன்னு கணக்கெழுதி வச்சிருப்பீங்களே.பேரேடு அது வேணும்..." 'இதுகள் எல்லாவற்றையும் எங்க வாங்கினீங்க... ? எப்படி வாங்கினீங்க...? எவ்வளவுக்கு வாங்கினீங்க...? எவ்வளவுக்கு வித்தீங்க...? இந்தக் கணக்கு வழக்கு வேணும். அவ்வளவுதான்.' செல்லையா லேசாய் அதிர்ந்து போனான். அவர் பேசப்பேச, அவர் சுட்டிக் காட்டிய பொருட்களையே பார்த்தவன், இப்போதுதானே ஒரு பொருள்மாதிரி நின்றான். முப்பது வயதையும், அதற்குரிய உடம்பையும் திமிறி எடுத்துக் காட்டும் ஸ்லாக் சட்டையின் காலரைப் பிடித்துக் கொண்டே அவர்களைப் பார்த்தான். உடல் லேசாய்க் குழைந்தது. உதவிக்கு யாராவது வருவார்களா என்று அக்கம் பக்கத்துக் கடைக்காரர்களைப் பார்த்தான். அந்தக் கடைகளில் வாயில்களுக்கு வெளியே தலைகள் மட்டும் வாசல் படியில் அடித்து வைக்கப்