74
சு.சமுத்திரம்
பட்டதைப் போல் தெரிந்தன. இப்போது டவாலிக்காரர் வட்டியும் முதலுமாக அதட்டினார். 'யோவ்..அய்யாவுக்கு உட்கார நாற்காலி போடேன்யா...' டவாலிக்காரர், சின்ன ஐயாவை விட்டுவிட்டதற்காக முகத்தை ஒரு குலுக்குக் குலுக்கிய போது, செல்லையா அவரை முறைத்த படியே கடைக்குள் இருந்த முக்காலியைத் தூக்கினான். 'நாங்க உட்காருறதுக்கு வரலை. உங்க கணக்கு வழக்க பார்க்கத் தான் வந்தோம். தலைக்கு மேல வேலை இருக்கு... கொஞ்சம் காட்டுறீங்களா?" செல்லையா, 'காரியமா, வீரியமா என்று தனக்குள்ளே ஒரு பட்டிமண்டபம் நடத்தினான். இடது பக்கமிருந்த அரிசிக் கடையையும், அதனோட ஒட்டியிருந்த பல சரக்குக் கடையையும், வலது பக்கம் உள்ள தேங்காய் கடையையும், எதிர்ப்பக்கங்களில் காணப்பட்ட காய்கறிக்கடையையும், அரவை மிஷினையும், சம்பந்தர் ஒயின் ஷாப்பையும் ஏதோ ஒரு சம்பந்தத்தோடு பார்த்தான். இவர்களுக்குத் தெரியாமல் அவர்களைப் பார்த்து, வாருங்கள் என்பது மாதிரி கையாட்டினான். அவர்களும் வந்தார்கள். அவனுக்க உதவியாக அல்ல; அவர்களுக்கு உதவியாக ஒருத்தர்; அவன் போட்ட முக்காலியை முறைத்துக்கொண்டே இரண்டு வண்ண பிளாஸ்டிக் நாற்காலிகளைக் கொண்டு வந்து போட்டார். ஒரு கடைக்காரர் இரண்டு கலர் பாட்டில்களையும், இன்னொருத்தர்