ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்
77
இளநீரையும் கொண்டுவந்தார். காய்கறிக்காரர் டவாலியன் காதைக் கடித்தார். தடியர் மீண்டும் கேட்டார். 'ஐயா, கணக்குப் புத்தகத்தையும் ரசீதுப் புத்தகத்தையும் காட்டுறீங்களா, இல்ல காட்ட வைக்கணுமா?" செல்லையாவுக்கு, காய்ப்புப் பிடித்த உள்ளங்கை வேர்த்தது. நெற்றி நரம்புகள் வெளிப்படையாகத் தெரிந்தன. மூச்சு வயிறின் அடிவாரம் வரை போனது. நீண்ட நெடிய கைகள் வளைந்தன. தட்டுத் தடுமாறிக் கேட்டான். கணக்கு வழக்கு வைக்கணும்னு தெரியாது சார்..இனிமேல் நீங்க சொன்னபடி வைக்கேங்க..." செல்லையா தடுமாறிக்கொண்டிருந்தான். பிறகு அவர்களைப் பார்த்து ஏதோ சொல்லப்போனான். சைக்கிளில் ஏறி, கடை கடையாய் அலைந்து பீடி வெற்றிலை வகையறாக்களை விற்றுக்கொண்ருந்தான். ஆறு மாதத்திற்கு முன்பு தான், மூதாதையர் பழுது பார்க்காமலே விட்டுவிட்டுப் போன இந்த வீட்டின் முன் திண்ணையை விரிவாக்கி இந்தச் சின்னக் கடையை வைத்திருப்பதாகச் சொல்லப்போனான். இந்தக் கடைக்காகவே தனக்கு ஒருத்தியைத் தாரமாகத் தந்தார்கள் என்று கூடப் பேசியிருப்பான். ஆனால் அவர்களோ, அவனைப் பார்க்கவில்லை. தடியர் வாயின் கீழுதட்டில் வலது கையை விரித்த வைத்துக் கொண்டு, சபாரியிடம் ஆலோசனை கேட்டார். பிறகு அரசாங்க முத்திரை பதித்த ஒரு காகிதக் கட்டில் எதையோ எழுதினார். அப்படி அவர் எழுதும் போது டவாலிக்காரர் செல்லையாவைக் கண்ணடித்துப் பார்த்தார். அவன் கண்கள் இவருக்குக் கிடைக்கவில்லை. இதற்குள் தடியர் நீட்டிய