பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

சு.சமுத்திரம்

இருக்கும்? இந்த மிட்டாய எடுத்து குழந்தைங்களுக்கு கொடுப்பீங்க. அதுங்க காலராவுல சாகும்... சரி. இதாவது போகட்டும். அதோ பாரு வெத்திலை... அதுல ஏன் அப்படி கொசு அரிக்குது? நீ வெற்றிலை விக்கிறியா... கொசுவை விக்கிறியா?" 'அதுக்கு நான் என்ன சார் செய்ய முடியும்? அதோ பாருங்க சார் குழாயடிக்திட்டை. அதுல ஒரு சிமெண்ட் திண்ணை கட்டி, ஒரு கால்வாய் விட்டிருந்தால் தண்ணீர் தேங்காது... மாசம் ஒரு தடவை மலேரியா ஒழிப்புன்னு ஒருத்தர் வந்து இந்த சுவர்ல நீள நீள கோடா இருக்கே. இதுல கையெழுத்து போட்டுட்டுப் போறார்... அந்தக் குட்டைத் தண்ணியை எடுக்க முடியாட்டாலும், கொசு மருந்தாவது அடிச்சிருக்கலாம்... ஒரு கால்வாயாவது கட்டி விட்டிருக் கலாம்...' ‘'எதிர்த்தா பேசுறே மிஸ்டர்? எது எதை எப்பப்ப பண்ணணும்னு எங்களுக்குத் தெரியும். இந்த ஏரியாவுல காலரா, மலேரியா வருதுன்னா ஏன் வராது? மொதல்ல அந்த வேர்க்கடலை ஜாடிய எடுய்யா. வெத்தலைய தூக்கி வெளிய எறிய்யா...' செல்லையா, கனத்த மோட்டார்பைக்கில் பருத்த கால்கள் இரண்டையும் இருபக்கமும் போட்டுக்கொண்டு பூட்ஸ் காலால் பூமாதேவியை மிதித்தபடி இருந்தவரைப் பார்த்தான். அவரும் ஒரு அரசாங்க முத்திரை குறிப்பேட்டை எடுத்தார். அவசர அவசரமாக எழுதி அவனிடம் நீட்டிவிட்டு அவனுக்கு விளக்கமளித்தார். 'கடையை சுகாதாரக் கேடாய் வச்சிருக்கிறதுக்காக சார்ஜ்ஷீட். அதாவது குற்றப் பத்திரிகை. நாளைக்கே கோர்ட்டுக்குப் போ.... தப்புன்னு ஒத்துக்கிட்டால் நூறு