உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு மாமரமும்பலமரங்கொத்திப் பறவைகளும்

81

ரூபாய் அபராதம் போடுவாங்க. அப்படி ஒத்துக்காட்டால், ஆறுமாசம் அலையவிட்டு, அப்புறமா ஐநூறு ரூபாய் போடுவாங்க. அது உன்னிஷ்டம். நான் இந்தக் கடைக்கு பழையபடி வரும்போது இந்த மாதிரி ஈயோ, கொசுவோ அரித்தால், கடையை இழுத்து மூடி சீல் வச்சிடுவேன். கோர்ட்டுக்குப் போகாமல் இருக்காதே. போகாவிட்டால் விலங்கோட சம்மன் வரும்.' அந்த மனிதர் பைக்கை விலங்குத்தனமாய்ப் பாயவிட்டார். அதோ பக்கத்து பலசரக்குக் கடையில முகப்பில் வைக்கப்பட்டுள்ள கருப்பட்டிகளில் ஈக்கள் இன்னொரு கருப்பட்டியாய் குவிந்து கிடக்கின்றன. இதோ இந்த அரிசிக் கடையில் அரிசி மூட்டைகளுக்கு ஊசிக்குல்லாய் போட்டது போல் கொசுக்கள் கூடாரமடித்துள்ளன. இந்த ஆளு ஏன் படையெடுப்பு இடங்களை விட்டுவிட்டு படையெடுக்கப் பட்ட இடத்துக்கு வந்தான்? மறுநாள், காலையில் கோர்ட்டுக்குப் போவதா, இல்லை விற்பனை வரி அலுவலகம் போவதா என்று மனைவியும் அவனும் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். கோர்ட்டுக்குப் போகவில்லையென்றால் விலங்கு. வரி ஆபீஸ்ரைப் பார்க்கவில்லையென்றால் வில்லங்கம். அந்தப் பிரச்சினையை அவர்கள் ஒத்திவைக்க கட்டாயப்படுத்தப்பட்டதுபோல் ஒரு டவாலி உள்ளே வந்தான். 'யோவ் செல்லையா... வீட்டுக்கு முன்னால நின்னு ஹாரன் அடிச்சோமில்ல... ஒன்காது என்ன செவிடா?...துரை