பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



82

சு.சமுத்திரம்

வெளில வந்து என்னனு கேட்க மாட்டிங்களோ?" 'வார்த்தைய அளந்து பேசுங்கய்யா... மனுஷனுக்கு மனுஷன் அடிமைகிடையாது. கண்டவன்லாம் கண்டபடி ஆரன் அடிப்பான். அவன் எனக்குத்தான் அடிச்சிருப்பான்னு சோசியமா தெரியும்?" செல்லையா மேற்கொண்டும் சூடாகப் பேசியிருப்பான். அதற்குள் அவன் மனைவி அவன் வாயை தனது முந்தானையை வைத்துப் பொத்திக் கொண்டாள். அவனை வீட்டுக்கு வெளியே தள்ளியும் விட்டாள். ஜீப்பில் கால்மேல் கால்போட்டு இருந்த ஆசாமி கீழே இறங்கினார். 'இந்தாப்பா... பப்ளிக் ரோட்ல ஒரு அடியை மறிச்சு கடை வச்சிருக்கே. இது என்ன ஒங்கப்பன் வீட்டு இடமா?” அதோ அந்த மளிகைக் கடை, இந்த அரிசிக் கடை, இந்தக் கடைங்களோட இடம்கூட என்கடையைவிட நீண்டிருக்குதே. சந்தேகமாயிருந்தால் நூல் வெச்சு அளந்துபாருங்க. ' 'அப்படியா விஷயம்? நான் ஒனக்கு சொல்லணும்னு அவசியமில்ல. எந்தெந்தக் கடை போக்குவரத்துக்கு இடைஞ்சலா இருக்குது, எந்தெந்தக் கடை இடைஞ்சலா இல்லையின்னு தீர்மானிக்கிறது எங்க அதிகாரம். இவ்வளவு பேசுறியே... இந்தத் திண்ணைய கடையாக்குறதுக்கு பிளான் காட்டினியா? பெர்மிஷன் வாங்கி இருக்கியா? என்ன நெனைச்சுக்கிட்ட ஒன்மனசிலே? ஆபீஸ்ல வந்து நோட்டீஸ் வாங்கிக்கோ. ஒரு வாரத்தில கடைய எடுத்துடணும். இல்லாவிட்டால் புல்டோசர் வரும். அதுக்கு, வீட்டுக்கும், கடைக்கும் வித்தியாசம் தெரியாதுப்பா...'