பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு மாமரமும்பலமரங்கொத்திப் பறவைகளும்

83

செல்லையா, போகப்போன அந்த ஜீப்புக்கு முன்னால் குறுக்காகப் போய் நின்று கொண்டான். 'ஸார், ஆபீசருங்க எல்லோருக்கும் பொதுவானவங்க. தப்புதண்டா செய்தால் தட்டிக் கேட்கக்கூடாதுன்னு சொல்லலை. அதே சமயத்துல அந்தத் தப்பு செய்த தொண்ணுற்று ஒன்பது பேரை விட்டுட்டு நூறாவது ஆளை மத்தவங்க தப்புக்கும் சேர்த்து மிரட்டுறது அநியாயம். ஜனநாயகத்துக்கு விரோதமானது. அந்த மளிகைக் கடை வாசலும், இந்த அரிசிக் கடை வாசலும் என் கடை வாசலைவிட மூணு அடி நீண்டிருக்கே, இதப்பார்க்காமல் இருக்கறதுக்கு ஒங்க கண்ணு என்ன குருடா?” "யோவ் வழியை விடுய்யா' அந்த ஜீப் போனதும், கடைக்காரர்கள் அவனைக் கீழே போட்டு விட்டு ஆளுக்கு ஆள் மிரட்டினார்கள். 'ஒன் வரைக்கும் பேசணும். எதுக்குடா எங்கள இழுக்குறே? நீ பெரிய மனுஷன் சின்ன மனுஷன் வித்தியாசம் தெரியாமல் வாயை வித்தியானா, இப்படி வம்படி வழக்கடிதான் வரும். ஒன்னால நாங்களும் இழுபடணுமா?" ஆளுக்கு ஆள் அவனைப் பிய்த்தெடுத்தபோது, மளிகைக் கடைக்காரர். 'இப்படி நடக்குமுன்னு எனக்கு போன வாரமே தெரியும்' என்றார். அவர் முகத்தில் ஒரு மர்மப்புன்னகை. செல்லையா அந்தக் கூட்டத்தில் ஏதோ கேட்கப் போனான். உடம்பை நிமிர்த்திக் கொண்டு அவன் வீறாப்பாக எழுந்தபோது, அவன் மனைவி கடையை இழுத்து மூடிவிட்டு, அவனை வீட்டுக்குள் இழுத்துக் கொண்டு போனாள்.