ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்
85
அந்தக் காவல் நிலையம் வெளியே ரத்த நிறத்தோடும், உள்ளே வெளுத்துப் போயும் உள்ள கட்டிடம். சிவப்புப் படிகளில் ஏறித் துப்பாக்கி அப்பிய வாசல் வழியே அவன் உள்ளே கொண்டுபோகப்பட்டபோது, அவன் மனைவி வெளியே கைகளை நெரித்துக்கொண்டு அங்குமிங்குமாக அல்லாடினாள். பிறகு அவன் பின்னால் ஓடிப்போனாள். இன்ஸ்பெக்டர் ஒரு 'எஸ்' வடிவ நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். அண்ணன் எதிர் நாற்காலியில்; இன்ஸ்பெக்டர் குற்றவாளிபோலவும், அண்ணன் இன்ஸ்பெக்டர் போலவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அண்ணனின் தலை, இன்ஸ்பெக்டரின் தலையை மறைத்த பம்பைத்தலை. எட்டுமுழ வேட்டியில் முகம் பார்க்கலாம். வெள்ளைச் சட்டையை ஒரு சுண்ணாம்பு டப்பிக்குள் அடக்கலாம். அப்படிப்பட்ட நேர்த்தி. அண்ணனின் பெருவிரல்களில் மட்டும் மோதிரம் இல்லை. இரண்டு கைகளிலும் இரண்டு பச்சைகள். ஒன்று பெண் பச்சை. இன்னொன்று ஆண் பச்சை. நாற்பது வயது அண்ணன். புது மோஸ்தர் பார்வை. 'அண்ணனைப் பார்த்ததும் செல்லையாவால் அழுகையை அடக்க முடியவில்லை. அவன் அழுது விட்டான். உடனே ஆசாமி படிந்துவிடுவான் என்பதை அனுமானித்த இன்ஸ்பெக்டர், அண்ணனைப் பெரிசுபடுத்த அவனைச் சிறிசு படுத்தினார். மேஜையை விலக்கிக் கொண்டே துள்ளி எழுந்தார். வார்த்தைகளும் 'வெண்டை” மீன்களாய்த் துள்ளின. 'என்னடா நெனச்சே பொறுக்கிப் பயலே... ஒரு கவர்மெண்ட் ஆபீசரை அடிக்கப் போயிருக்கே..அவரு ஜீப்புக்கு வழி விடாமல் தடுக்கப் போயிருக்கே. ராஸ்கல்.. அவ்வளவு திமிரா ஒனக்கு. யாருப்பா.. இந்தப் பயலை விசாரிக்கிற விதமா விசாரியுங்க...முட்டிக்கு முட்டி