பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

சு.சமுத்திரம்

தட்டுங்க. ' செல்லையா தன்னைப் பிடிக்க வந்த போலீஸ்காரரிடம் பிடிபடாமலே அண்ணனிடம் முறையிட்டான். அழுதழுது சொன்னான். 'பாருங்கண்ணே..அவங்க பேசற பேச்சை..என்னை பாடாப் படுத்திட்டாங்க,அண்ணே..என்னை மட்டும் குறி வச்சாங்க அண்ணே.எனக்கு எதுவுமே புரியலை அண்ணே. ஒங்க கண்ணு முன்னாலேயே எப்படி திட்டுறாங்க பாருங்க. இவ்வளவுக்கும் நான் ஓட்டுப்போட்ட வாக்காளன்.' 'அண்ணன் கடிகாரத்தைத் துடைத்தபடியே பாலைக் குடிக்காத பூனை போல் அப்பாவித்தனமாகப் பேசினார். 'என்கிட்டே ஏய்யா கேட்கிறே... நான் யாரு.. நீ யாரு.. போனவாரம் உன் கடைப்பக்கம் வந்தேன். நாலு பேரோட வந்துதான் கேட்டேன். முதலமைச்சர் வெள்ளத்தைப் பார்வையிட வாராங்க..நம்ம தவப்பயனா வருகிற முதலமைச்சருக்கு வரவேற்பு வளையம் வைக்கணும். கட்அவுட் வைக்கணும், ஒரு ஐநூறு ரூபாய் நன்கொடையா கொடுன்னு கேட்டேன்... எல்லாக் கடைக்காரங்களும் கேட்டதுக்கு மேலேயே கொடுத்தாங்க..ஆனால் நீ எப்படி கொடுத்தே. 'மக்கள் எழவுல தவிக்கிறது மாதிரி தவிக் கையில, கல்யாண மேளம் எதுக்கண்ணேன்னு கேட்டே.. சரி, கொடுக்கிறத கொடுத்திட்டாவது கேட்டியா... இல்ல...ஜனநாயக நாட்டில நான் எதுக்கண்ணே நன்கொடை கொடுக் கணுமுன்னு கேட்டே... நான் அப்பவே ஒதுங்கிட்டேன்...ஜனநாயகம் பாடு.உன் பாடு. எனக்கென்ன..."

குங்குமம் -15.2.93