பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நிசங்களை விழுங்கிய நிழல்கள்

ராக்கம்மா, வயிறு முதல் வாய் வரை மூச்சிழுக்க நின்றாள். கட்டிட வேலைக்குப் போக வேண்டிய கட்டாய நேரத்தை கணக்கில் கொண்டு, காலங்காத்தாலேயேதான் அந்தக் கடையை பார்த்து நடந்தாள். ஆனால், அதற்குள் அந்த கடைக்கே வால் முளைத்தது போல மருண்டும், சுருண்டும் நின்ற மனித வரிசையைப் பார்த்து 'அடியம்மா... இம்மாங்காட்டியா..."என்று தன்னையறியாமலேயே சத்தம் போட்டு சொன்னபடியே ஓடிப்போய் நின்றாள்.எதிர் திசையில் பைகளும், கைகளுமாக வந்து கொண்டிருந்த நான்கைந்து பெண்களுக்கு முன்னால் நிற்க வேண்டும் என்ற வேகம் அவளை விரைவு படுத்தியது. ராக்கம்மா, கம்பளி பூச்சி போல் பல்வேறு ஆடைகளோடு நின்ற பெண்கள் கூட்டத்திற்கு பின்னால் நின்றபடியே அந்த நியாயவிலைக் கடையை, வலது கையிலிருந்த பிளாஸ்டிக் கேனை குழந்தையைப் போல் இடுப்பில் வைத்துக் கொண்டு பார்த்தாள். இன்னொரு கையில் பிடித்த துணிப்பையால் வேர்த்த தன் முகத்தை வீசியபடியே அவள் உள்ளே