பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88 சு.சமுத்திரம் பார்த்த போது: அவள் நின்ற குண்டும் குழியுமானசாலை கட்டிட வடிவம் பெற்றால் எப்படியோ, அப்படிப்பட்ட பாடாதி கட்டிடம். காவல் நிலைய லாக்கப் கம்பிகள் மாதிரி போடப்பட்ட அறைக்குள்ளே ஒருகிடா மீசைக்காரன் கவுண்டருக்குள் நுழைந்த கைகளில் உள்ள குடும்ப கார்டுகளில் எதையோ ஒன்றைப் பறித்துக்கொண்டிருந்தான். அந்தக் கைகளின் தொடர்ச்சிகளான முகங்களை உற்றுப்பார்த்து, அந்த முகங்களுக்கு ஏற்றாற்போலவே முன்னுரிமை கொடுத்தான். ஆசாமியைப் பார்த்தால் அசல் லாக்கப்பில் இருக்க முழுத்தகுதிப் பெற்றவன் போல் தோன்றினான். ராக்கம்மா, சற்று திருப்தியோடு மூச்சு விட்டாள். அவளுக்கு முன்னால் சுமார் 30 பேர்தான் ஒற்றை ஒற்றையாகவும், இரட்டை இரட்டையாகவும் நின்றார்கள். வரிசையில் முகப்புப் பகுதியில்தான் கரடித்தலை மாதிரி பல்வேறு மனிதத் தலைகள். மனிதக்கால்கள் அங்குலம் அங்குலமாக நகர்ந்தன. சிலர் கிருஷ்ணாயிலை வாங்கிக் கொண்டுதான் போனார்கள். ராக்கம்மா பக்கத்தில் நின்ற சுமதியிடம் கடைக்காரனுக்கு கேட்கட்டும் என்பது மாதிரி பேசினாள். கிருஷ்ணாயில் இருக்கத்தான் கீது....பாரும்மே... ஆப்பக்கடை ஆயாவோட பையில அவன் எப்படி திட்டினபடியே அரிசிப் போடறான்பாரு...அவனுக்கு சர்க்கார் அரிசி பூட்ரோம்கிற நினைப்புல்ல. நமக்கெல்லாம் வாக்கரிசி போடறதா நினைப்பு. ஒழிஞ்சுபோறான். கிருஷ்ணாயில் கிடைச்சா சரிதான். எம்மாடி... எம்மாடி... இந்த கிருஷ்ணாயிலுக்காக எத்தனவாட்டிதான அலை யறது. நேத்து காத்துநின்னா கடைசில சொல்றான் கஸ்