பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும் 89


மாலப்பய..இல்லன்னு நல்லாத்தான்கேட்டேன்.முதல்லயே சொன்னா இன்னன்னு...அதுக்கு அவன் எப்படி முறைச்சான் தெரியுமா..? பாருடி..அங்கே..அந்த குப்புப்பய என்ன செய்யறான்னு. ராக்கம்மாவுடன் சேர்ந்து கமலாவும் குப்புவைப் பார்த்தாள். ஒல்லி அதோடு குள்ளம். இப்போதுதான் அங்கே வந்த நகை நட்டுப்போட்ட பெண்களிடமிருந்து கார்டுகளை வாங்கி கவுண்டரில் கொடுக்கிறான். உள்ளே இருக்கின்ற கிடா மீசைக்காரனும் வரிசைபற்றி கவலைப்படாமல் அந்த பெண்களுக்கே பில் போட்டுக் கொடுத்தான். ராக்கம்மாவால் தாளமுடியவில்லை. சத்தம்போட்டே கேட்டாள்...'யோவ்.குப்பு இன்னாய்யா.கூத்து...இவங்க இப்போதான் வந்தாங்க. சட்டப்படி க்யூவில நிக்கணும். நீ என்னடான்னா.. எங்க கஷ்டத்த கவலப்படாம அப்படிவாங்கிக்குடுத்தா என்னய்யா அர்த்தம்.' குப்பு அர்த்தம் சொன்னான். 'கடைல ஆம்பள க்யூ, பொம்மனாட்டி க்யூன்னு இரண்டு க்யூ உண்டு. நான்... ஆம்பள... வாங்கிக் குடுக்கத்தான் செய்வேன்.' " உன்னால நீ ஆம்பளங்கறதை இப்படித்தான் காட்ட முடியும்.' 'ஏய்...ராக்கு...” 'பின்ன இன்னய்யா... கிருஷ்ணாயில் வாங்கி வீட்ல கஞ்சிகாய்ச்சி குடிச்சிட்டு வேலைக்கி போவணும். இந்த பாயாபோற கிருஷ்ணாயிலுக்கா மூனு நாளா லேட்டா போறேன். நேத்தே அந்த மேஸ்திரி - ராக்கு....உன் கணக்க