பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90 சு.சமுத்திரம்


பார்ப்போமானு சிரிச்ச படியே சொல்லி என்ன அயவெச்சான். இன்னிக்கும் லேட்டுன்னா அவ்வளதான். நீ என்னடான்னா இரட்டவட சங்கிலி போட்டவங்களா பாத்து ஒத்தாச பண்ணுற. இத நாயமான்னு நீயே பாரு.' தலைகாய்ந்த பெண்கள் மத்தியிலே லேசான முணுமுணுப்பு... ஆனாலும் அந்தப் பெண்கள் இந்த இரட்டை சங்கிலிக்காரிகளிடம் வேலைப்பார்ப்பவர்கள். ஆகையால் அவர்கள் முனங்கல் குறைப்பிரசவமாகியது. ராக்கம்மா விடவில்லை. "யோவ்...குப்புண்ணா. நாங்கல்லாம் பொம்மனாட்டியா உனக்கி தெரியலையா..? பாமாயில் இல்லாட்டியும் சாப்டல்லாம். ஆனா கிருஷ்ணாயில் இல்லாட்டி எப்படி சமைக்கிறதாம். மரியாதையா பூடு.. இல்லாட்டி நான் மனுஷியா இருக்க மாட்டேன். ஏமே.. சுமதி நீயும் கேளேம்மே...' சுமதி கேட்கலாமா... வேண்டாமா.. என்று யோசித்த போது. எந்த பெண்களிடமும் வேலைப் பார்க்காமல் சுயேட்சையாக மீன் விற்கும் சோதி தனது கடல் வரிசையைக் காட்டினாள். யோவ்...அடுத்துக் கெடுக்கிற பையா..சோமாரி... கஸ்மாலம்... அந்தண்ட போறியா இல்லாட்டி இந்தண்ட இருந்து நாங்க வாரனுமா...? நீல்லாம் வேற பொழப்பு பொழக்கலாம்.' குப்புப்பயல் பயந்து விட்டான்.... சோதி. தீப்பிடித்துக் கொள்வது மாதிரி பிடித்துக்கொள்வாள் என்பது அவனுக்குத் தெரியும். அதே சமயம்தான் வீரமாகத்தான் இருப்பதுபோல, அவளுக்குப் பதிலாக ராக்கம்மாவை முறைத்தபடி சில