பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8   ✲   ராதை சிரித்தாள்

வல்லிக்கண்ணன்



காப்பி குடித்து விட்டுக் கையிலேயே வைத்திருந்த டம்ளரை, குனிந்து தரையிலே வைக்கப் போனான். அதற்குள் அவள் விரைந்து பற்றிக் கொண்டாள்.

அப்படி அவள் வேகமாகச் குனியும்போது நெளிந்த கூத்தலையும், அழகாக ஆடிய லோலக்குகளையும், கவனித்தான் சிவராமன். 'ராதையின் கழுத்து ரொம்ப அழகாகத் தானிருக்கிறது!' என்ற எண்ணம் உதித்தது அந்த 'யோக்கிய சிகாமணி'யின் மனசிலே. உடனேயே 'சே, என்ன நினைப்பு!' என்று கடிந்து கொண்டது உள்ளம்.

அவள் அலை மிதந்து போவதுபோல எழிலாகத் திரும்பிச் சென்றாள். அவள் பக்கமிருந்து அவன் பார்வையைத் திருப்பிக் கொள்ளவில்லை, அவள் மறைந்த பிறகுதான் 'இப்படி நான் பார்த்திருக்கக் கூடாது' என்ற நினைப்பு பிறந்தது.

'இதற்குத்தான் நான் இங்கு வரக்கூடாது என்று நினைத்தேன். அவள் ஒவ்வொரு அசைவும் பேச்சும் மறக்க முடியாத பழைய தொல்லைகளையேதான் நினைவுக்கு இழுக்கின்றன... போகுது, வந்ததோ வந்தாக்க, இனி சீக்கிரம் திரும்பிப் போக வேண்டியது தான். அதற்கானதைத்தான் கவனிக்கணும்' என்று முனங்கிக் கோண்டான்.

'குளிக்க வெந்நி வேணுமா உங்களுக்கு?' என்று கேட்டுக் கொண்டு வந்தாள் ராதை.

'இல்லை இல்லை, பச்சத் தண்ணியே போதும் என்றான்.

அப்பொ நீங்க குளிக்கலாமே. செம்பு, சோப்பு டப்பா எல்லாம் பம்பு அடியிலேயே இருக்கு' என்று விளக்கினாள் அவள்.

'ஊம்' என்று கிளம்பிப் போனான். எல்லாம் தயாராக இருந்தது. 'சோப்பு என்னத்துக்கு!' என்று முனங்கியபடி அந்த அழகான டப்பாவை எடுத்துப் பார்த்தான். ஈரம் காய்ந்திராத அந்தச் சோப்பு மீது நீண்ட ரோமம் ஒன்று வளைந்து நெளிந்து படிந்திருந்தது. அவள் உபயோகிக்கிற சோப்பையே எனக்கு வச்சிட்டா போலிருக்கு ஹூம்!' என்று அதை ஒதுக்கி வைத்துவிட்டான்.

நான் இங்கு வந்தது சரியில்லை என்றுதான் படுது. நாலு வருஷங்களாச்சுதான் என்றாலும் அவள் மாறலே. மறக்கவு மில்லை