பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் ஏழு மாடியில் இருந்த கிருஷ்ணவேணியின் காதுகளில் காந்திமதியின் கூப்பாடு மிகவும் தெளிவாகக் கேட்டது. அவள்தான் காட்டுக்கத்தல் கத்திக்கொண்டிருந்தாளே! மனைவி என்கிற உரிமையோடு அந்தப் பொம்பிள்ளை ஒரு நாடகமே ஆடிக் கொண்டிருப்பதாக மிஸ் கிருஷ்ணவேணிக்குப் பட்டது. திடீரென்று அலறலின் தொனி மாறியதை அவள் உணர்ந்தாள். பீதியினால், செய்யும் வகை அறியாது, அலறுகிற அவலக் கூச்சலாக ஒலித்தது காந்திமதியின் குரல். என்னவோ ஏதோ என்று பதறியடித்து கீழே ஓடிவந்தாள் கிருஷ்ணவேணி துணிபற்றி எரியும் நாற்றம் வேறு வந்தது. அவள் வேகமாக வீட்டுக்குள்ளே ஓடினாள். உடுத்திய சேலையில் தி தாவித்தாவிப் படர, காந்திமதி பயந்து கதறியவாறே அங்குமிங்கும் ஒடிக்கொண்டிருந்தாள். அதனால் தீயின் வேகம் எவ்வியது. அவளை வியப்போடு பார்த்துக் கொண்டிருந்த வெயிலுவைக் கண்டதும் கிருஷ்ணவேணி ஆத்திரம் கொண்டாள். "என்ன இது? இவளைக் காப்பாத்தாமே இப்படி உட்கார்ந்திருந்தா என்ன அர்த்தம்? தீ எப்படிப் புடிச்சுது?" என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டு, அவற்றுக்குரிய பதிலை எதிர்பார்க்காமலே, அவள் பரபரத்தாள். பக்கத்து அறையில் சுவர் ஓரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல்லு மூட்டைகள் மீது கிடந்த காலிக் கோணிப்பைகள் அவள் பார்வையில் பட்டன. அவள் வேகமாகப் பாய்ந்து அவற்றில் இரண்டை எடுத்து வந்து, காந்திமதிமீது போர்த்தி, அவளை கீழே படுக்கவைத்து உருட்டினாள். இதற்குள் காந்திமதியின் ஒலத்தால் ஈர்க்கப்பெற்று, எதிர்த்த வீட்டிலிருந்து சிலர் ஓடி வந்திருந்தார்கள். வண்டிக்காரன் வீட்டில் இல்லை. எல்லோரும் செய்த உதவியினால் தீ அணைந்து போயிற்று. காந்திமதியின் உடம்பில் நெருப்பு பல இடங்களைச் சுட்டிருந்தது. நோஞ்சானான அவள் இப்போது மூர்ச்சை அடைந்து விட்டாள். மகிழ்வண்ண புரத்தில் ஆபத்து அவசரத்துக்கு உதவக்கூடிய ஒரு வைத்தியர் இருந்தார். அவர் வரவழைக்கப்பட்டார். அவர் வந்து தன்னாலான சிகிச்சைகளை செய்துவிட்டு, "அம்மாவை டவுன் ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போறதுதான் நல்லது" என்று அறிவித்தார்.