பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் பெற்று விடுவதில்லை. சில வருட காலம், யாழ்பட்ட தோற்றம் கொண்டு, பூட்டியே கிடந்த ஒத்தை வீடு மீண்டும் உயிர் பெற்றிருந்தது. கோர்ட்டு வழக்கு இழுத்துக் கொண்டே போன நிலையில். அதிகமாகப் பணம் செலவானதால்-சம்பந்தப்பட்டவர்கள் விழிப்படைந்தார்கள். முக்கியஸ்தர்களைக் கூட்டி, தங்களுக்குள் பேசி, விவாதித்து, சண்டை போட்டும் கூச்சலிட்டும், ஒரு மாதிரியான சமரசத்துக்கு வந்தார்கள். வெயிலுவின் வீட்டையும் சொத்துக்களையும் அவனுடைய பெரியப்பா பிள்ளைகளும் சித்தப்பா பிள்ளையும் சரிசமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டியது. எல்லாவற்றுக்கும் முறைப்படி ரூபாய் மதிப்பு நிர்ணயித்து, பங்கீடு செய்து, சமமாகப் பிரித்துக் கொள்வது. நிலம் அல்லது வீட்டின் பகுதி தேவைப்படாதவர்கள், அவர்கள் பங்குக்கு உரிய தொகையைப் பெற்றுக் கொள்வது. தேவைப்பட்டவர்கள்-வசதி உடையவர்கள்-அந்தப் பணத்தைக் கொடுத்து விட்டு உரிய பங்கை எடுத்துக் கொள்ளலாம். இந்த முடிவின்படி செயல்பட்டார்கள். வீட்டை இரண்டு பாகமாக்கி, பெரியப்பா மகன் ஒரு பாகத்தையும், சித்தப்பா மகன் இன்னொரு பாகத்தையும் எடுத்துக் கொள்ளலாம் என்றொரு யோசனை எழுந்தது. பெரியப்பா பிள்ளை தனக்கெனத் தனிவீடு வசதியாகக் கட்டிக் கொண்டு குடியிருப்பதால், இந்தப் பெரிய வீட்டில் ஒரு பகுதி தேவையில்லை என்று அபிப்பிராயப்பட்டார். சிவகுருநாதனுக்கு சொந்த வீடு இல்லை; விரும்பினால் அவனே முழு வீட்டையும் எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார். சிவகுருநாதனும் அதற்கு இசைந்தான். நகைகளை விற்றுப் பணம் புரட்டி, பங்குத் தொகையைக் கொடுத்து விட்டு, பெரிய வீட்டை தனது உடைமை ஆக்கிக் கொண்டான். 'ஒத்தை வீடு மறுபடியும் கலகலப்பு அடைந்தது. பிள்ளைகள் பலர் இருந்தார்கள். தங்களுக்குள் அடிக்கடி சண்டை போட்டார்கள். கூச்சலிட்டுக் குதித்தார்கள். சிவகுருநாதன் வீட்டைச் சுற்றிலும் காய்கறித் தோட்டம் போட்டான். வீட்டுப் பக்கத்திலேயே வைக்கோல் படப்பை பெரிதாக அடைத்து வைத்தான். பிள்ளைகள் 'தட்டட்டி (மொட்டைமாடி) மேலே ஏறி, கவுதச் சுவர் மீது நின்று.