பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் போடத் தொடங்கியது. அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த அவளுடைய சுபாவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட குரங்குகள் ஆயின. தையல்நாயகி அம்மாளுக்கும். பெரும்பாலான பெண்களைப் போலவே, பிறந்த இடத்துப் பாசமும், அதனால் ஏற்பட்ட பெருமையும் அதிகம் இருந்தன. பேச்சுக்குப் பேச்சு, எங்க அப்பா வீட்டிலே என்றும், எங்க அம்மா....எங்க அம்மா என்றும், எங்க அண்ணாச்சி இருந்தாகளே, அவுக... என்றும் புரவோலங்களை உதிர்த்துக் கொட்டுவதில் அவளுக்கு அலுப்பு உண்டாகாது. கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் சலிப்பும், எரிச்சலும் உண்டாகும். பிறந்த இடத்தை விட்டு மகிழ்வண்ணபுரத்துக்கு அவள் வந்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்ட போதிலும் கூட, எங்க வீடு' "எங்க ஊரு என்று உச்சரிப்பதிலேயே அந்த அம்மாள் பெருமையும் மகிழ்வும் அனுபவித்து வந்தாள். கணவன் இறந்து, இந்த வீட்டில் முழு அதிகாரமும் அவளுக்கு வந்துவிட்ட பிறகும் அவள் தனது பிறந்த இடத்துப் பெருமைகளைக் கூறிக்கொண்டிருப்பதில் அலாதியான ஒரு மனச்சுகம் பெற்று வந்தாள். தையல்நாயகியின் பிறந்த வீடு ரொம்பவும் சாதாரணமானது தான். அவள் உறவினர் வயல்களில் இறங்கி உழுது பயிரிட்டுக் கொண்டிருந்தார்கள்; தோட்டங்களில் கீரை பயிரிட்டு விற்பனை செய்து வாழ்ந்தார்கள். இதெல்லாம் பிறவிப்பெருமாள் பிள்ளைக்கு உவப்பான விஷயங்களாக இருந்ததில்லை. எனவே அவர்களை அவர் ஒதுக்கியே வைத்திருந்தார். அவர்கள் சொந்தம் பாராட்டி வீடு தேடி வருவதை பிள்ளை ஆதரித்ததுமில்லை. அவர் இறந்த பிறகு தையல்நாயகியின் அன்பு பெருக்கெடுத்தது. ஒத்தை வீட்டின் வாசல் அவர்களுக்கு எப்போதும் திறந்தே இருந்தது. அதனால் அவளது பிறந்த ஊர்காரர்கள்-கற்றி வளைத்து ஏதோ உறவு சொல்லக் கூடியவர்கள் கூட-இங்கு வந்து விருந்தாடி விட்டுப் போனார்கள். அவளுக்குப் பிடித்தமான மச்சினியும், அக்காளும், பெரியம்மாவும், அத்தையும் நாள் கணக்கில் தங்கிச் செல்வதும் சகஜம் ஆயிற்று. அவர்கள்-தாமரைக்குளம் மந்திரவாதி, செண்பகராமன்