பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் பொரிக்குதே" என்று புலம்பினாள். கைப்பக்குவமாக மருந்துகள் தயாரித்துக் கொடுப்பதில் ஈடுபட்டாள். நாலு வருஷங்களுக்கு முன்னாலே போனவ நாயா அலைஞ்சிட்டு இப்போ தானா வந்திருக்கா. மெலிஞ்சு, கறுத்து, என்னமாத்தான் ஆகியிருக்கா. இவளை இக்கோலம் கண்ட கரிமுடிவான் என்ன ஆனானோ?...தாயின் மனம் புழுங்கியது. சூடி கடுமையான காய்ச்சலினால் கஷ்டப்பட்டாள் அநேக நாட்கள். இடையிடையே தன் கதையையும் சொல்லித் தீர்த்தாள். ஆசை அலைக்கழிக்க, உணர்ச்சிகள் இயக்குவிக்க, இஷ்டம் போல் மாமன் மகன் சுந்தரமூர்த்தியுடன் வீட்டை விட்டு வெளியேறிய சூடிக்கொடுத்த நாச்சியார் வெகு சீக்கிரமே அனுபவ ஞானம் பெற்றாள். அவனோடு கூட்டு வாழ்க்கையில் அவள் சொர்க்கங்களை நிறுவ முடியவில்லை. அவனிடம் பணம் இல்லை. அவளுடைய நகைகள் வெகுகாலம் ஈடுகொடுக்கவில்லை. இரண்டு பேரும் முதலில் மதுரைக்குப் போனார்கள். வேலை தேடுகிறேன் என்று அவன் வீணாக அலைந்து திரிந்ததுதான் கண்டபலன். பிறகு வெவ்வேறு நகரங்களுக்குப் போனார்கள். சில சில மாதங்கள் தங்கினார்கள். அவனது குணங்கள் மாறி வந்ததாக அவள் உணர்ந்தாள். மோகம் தீர்ந்து, வறுமை வளர்ந்து, அன்றாட வாழ்க்கையின் பிரச்னைகள் தலைதுாக்கவும், இரண்டு பேரும் நாயும் பூனையுமானார்கள். அடிக்கடி சண்டையும் சச்சரவும்தான். சில சமயம் அவன் அவளை அடித்து உதைத்ததும் உண்டு. ஏதோ ஒரு மயக்கத்தில் வீட்டை விட்டு ஓடி வந்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை சூடி தினந்தோறும் உணர்ந்து வருத்தப்படலானாள். சுந்தரம் ஏதேதோ வேலைகளில் சேர்ந்தான். எதிலும் நிலையாக இருக்கவில்லை. அரைப்பட்டினி, முக்கால் பட்டினி கிடந்த நாட்களுக்குக் கணக்கேயில்லை. அவளும் தன்னால் இயன்ற அளவுக்கு சிறுசிறு வேலைகள் செய்து காசு தேட முயன்றாள். மிகவும் சிரமமான வாழ்க்கை தான். அதுவரை செல்லமாக வளர்ந்து விட்டவள் என்ன வேலையை செய்துவிட முடியும்? ஓய்ந்து படுத்தால், அவன் ஏசிப் பேசினான். -- எப்படியோ வருடங்கள் ஓடின. சுந்தரமூர்த்தி அவளை