பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் காட்டினாள். அதன் பிறகு சாமியார் அடிக்கடி அந்த வீட்டுக்கு வர ஆரம்பித்தார். அவர் ஏன் அப்படி வருகிறார் என்று ஊரின் 'உண்மை தேடிகளும், பொதுஜன நலம் நாடிகளும் கவலைப்படலானார்கள். வெயிலைக் கூப்பிட்டு சாமியான் என்ன பேசினான், ஏது செய்தான் என்றெல்லாம் தூண்டித் துளைத்தார்கள். "ஏய், அவனை நடை ஏத்தாதே. வீட்டுக்கே ஆபத்து வந்து சேரும்" என்று உபதேசித்தார்கள். "அந்தச் சாமியான் வர்றது எனக்கும் பிடிக்கல்லே" என்று வெயிலு சொன்னான். "அப்போ சரி. அடுத்த தடவை ஒரு வழி பண்ணுவோம்" என்று அவர்கள் உறுதியாய் சொன்னார்கள். அந்த சந்தர்ப்பமும் வந்தது. அடுத்த முறை சாமியார் ரயிலிலிருந்து இறங்கி, சாலையில் நடந்து வரும்போது, நல்லது விரும்பி ஒருவன் பார்த்துவிட்டான். உடனே இதர நலம் நாடி’ களையும் உண்மை தேடிகளையும் கூட்டிக்கொண்டு, கும்பலாக ஊர்முக்கிற்கு வந்து சேர்ந்தான். சாமியார் கவலையற்றவராய், "ஞாயிறு திங்கள் செவ்வாய்-அவை நல்ல நல்ல புதனோடு வியாழன், Gorា, சனியும் நல்ல நல்ல. அவை நல்ல நல்ல" என்று பாடியபடி மெதுநடை நடந்து வந்தார். . . . . "ஆமா ஆமா. ஊர்ச்சாப்பாட்டை முக்கு முட்டத் தின்னு போட்டு ஊர் மேயத் திரிகிற தடிமாடன்களுக்கு எல்லாமே நல்ல நல்ல தாண்டா!" என்று ஒருவன் அவர் முன்னே வந்து நின்று கனத்த குரலில் சொன்னான். சாமியார் திடுக்கிட்டார். திகைத்து நின்றார். "என்ன? என்ன? ஏன் என்னை வழி மறிக்கிறீங்க?" என்று கேட்டார். வேய், உம்மைப்போல ஒரு சாம்பல் பூசிதான் ஒரு சமயம், ஓகோ இதுதான் பூலோகமா? நீங்கள் எல்லாம் மானிடக் குட்டிகளா? என்று கேட்டானாம். உம்மைப் போல எத்துச் சாமி கள் எத்தனையோ பேரை நாங்கள் பாத்திருக்கோம். இப்போ நீரு வந்து சேர்ந்திருக்கிரு!" என்று இன்னொருவன் பேசினான்.