பக்கம்:ஒரே உரிமை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தையின் குதூகலம்

49

ஜாங்கிரி, மைசூர்பாக் – இப்படி எத்தனை எத்தனையோ விதமான தித்திப்புப் பட்சணங்கள் எல்லாம் இருக்கும், அப்புறம் போண்டா, வடை, மிக்சர் – இப்படி எத்தனை எத்தனையோ விதமான காரப் பட்சணங்கள் எல்லாம் இருக்கும். கடைசியிலே காப்பி, டீ எல்லாம் வேறே. கீழே வரிசை வரிசையாக மேஜை, நாற்காலி எல்லாம் போட்டிருக்கும்; நாமெல்லாம் போனதும் ‘ஜம்’ மென்று அவற்றின் மேல் உட்கார்ந்து கொள்ள வேண்டியது. ‘என்ன வேணும்?’னு கேட்டுண்டே ஒருத்தன் வருவான். அவன் நமக்கு வேண்டியதைக் கொண்டு வந்து வைப்பான். ஒரு கை பார்த்து விட்டு, வாசலிலே உட்கார்ந்திருக்கும் ‘காஷிய’ரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு வந்துட வேண்டியது!”

மணியின் நாக்கில் ஜலம் ஊறிற்று. அவன் அதைக் கூட்டி விழுங்கிக் கொண்டே, “ஏண்டா, நீ என்னென்னவோ சொல்றயே! எனக்கு ஒண்ணுமே புரியலையேடா!” என்றான் தலையைச் சொறிந்து கொண்டே.

“ஆமாண்டா, அதெல்லாம் தலையைச் சொறிந்தாப் புரியாதுடா! பணம் இருக்கணும், பணம்!” என்றான் சங்கர் சிரித்துக் கொண்டே.

“மணியின் முகத்தில் அசடு வழிந்தது. ஆனாலும் அவன் அந்த இடத்தை விட்டு நகராமல், “உம்...அப்புறம்...” என்று மேலே ஆரம்பிக்கச் சொல்வது போல் சங்கரின் முகத்தைப் பார்த்தான்.

அதற்கேற்றாற்போல், “அப்பாலே நாங்கள் எல்லோரும் ‘பீச்’சுக்குப் போனோம்!” என்று சங்கரும் நீட்டி முழக்கிக் கொண்டு ஆரம்பித்தான்.

அவனை இடைமறித்து, “ஏன்?” என்று கேட்டு வைத்தான் ஆப்பாவி மணி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/51&oldid=1148962" இலிருந்து மீள்விக்கப்பட்டது