இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அதன்படியே, சாபம் இட்ட வீரனான சிபாடஸீக்கு அந்நகர மக்கள் சிலை ஒன்றை அமைத்தனர். அதற்கு பிறகு வந்த அடுத்த ஒலிம்பிக் பந்தயத்திலேயே,ஓட்டப் பந்தயத்தில் 'சாஸ்தரதாஸ்' என்ற வீரன் வெற்றி பெற்றான் என்று ஒரு நிகழ்ச்சி நவில்கின்றது. செத்தும் சிலை பெற்றான் சிபாடஸ்!