உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60


வெற்றி பெற்றன். எப்படி? வெற்றி பெற்ற லட்சணம் இப்படித்தான்.

தேர் ஒட்டப் பந்தயத்தில் மன்னன் நீரோவும், அவனைச் சேர்ந்த மற்ற (உடலாளர்களும்) வீரர்களும் போட்டியிட்டனர். வேகமாகத் தேரோட்டி வந்த மன்னன் பாதி வழியிலே திடீரென்று தேரிலிருந்து விழுந்துவிட்டான். மற்றவர்களுக்கு என்ன ? தேரை ஒட்டிக்கொண்டு முதலாவதாகச் சென்று வெற்றி பெறவேண்டியதுதானே முறை ? போட்டியில் பங்குகொண்ட அத்தனை பேரும். கீழே விழுந்த அன்னன் எழுந்து, தேரில் ஏறிக்கொண்டு. மீண்டும் தேரை ஒட்டும் வரை அதே இடத்தில் காத்துக்கொண்டு நின்றனர். மன்னன் பிறகு தேரில் ஏறி ஒட்டிச் சென்று முதலாவது இடத்தை அடையும் வரை. அவர்கள் அவன் பின்னால்தான் ஒட்டிச் சென்றிருக்கிறார்கள். மன்னனுக்குப் பயந்து கொண்டு மற்றவர்கள் போட்டிகளில் பின்வாங்க, மன்னன் நீரோ, தானே எல்லா நிகழ்ச்சிகளிலும் போட்டியிட்டு அத்தனைப் போட்டிகளிலும் தானே முதலாவது இடத்தைக் பிடித்து வெற்றி வீரனாக வந்திருக்கிருன். புகழ் மிக்க, பேராற்றல் மிக்கதோர் ஒலிம்பிக் பந்தயத்தைப் புழுதியிலும் கேவலகா க, பொய் நிறைந்த களமாக மாற்றிவிட்டான்.

அத்துடன் விட்டானா! அந்த நாட்டை ஆள்கின்ற அரசன் என்ற ஆணவத்தாலோ என்னவோ, தானே தலையாய வீரன் என்று எண்ணிக்கொண்ட கர்வத்தாலோ என்னவோ, 'ஆண்டவனே வந்துஅளந்து கட்டிமுடித்து ஆரம்பித்த விளையாட்டுப் பந்தய மைதானம் என்று மக்கள் நம்பி வழிபட்ட மைதானத்திற்குள்ளே, ஒரு விட்டைக் கட்டிக்கொண்டு, வாழத் தொடங்கிவிட்டான். கடவுள் குடியேறியிருந்த இடம் என்று மக்கள் வணங்கிய திடலில் மனிதன் குடியேறி, அந்த புனிதத் தன்மையையும் மாற மரபையும் மதிப்பை,மண்ணோடு மண்ணாக்கி