74
கிரேக்க நாட்டினரும் ஒலிம்பிக் பந்தயத்தை மீண்டும் தங்கள் நாட்டிலேயே தொடங்கிவைக்கும் முடிவை மனமார ஏற்றுக் கொண்டனர். ஏற்றுக் கொண்டால் மட்டும் போதுமா ? ஏற்ற காரியம் வெற்றி பெறுவதற்கும். எடுத்துக்
கொள்ளும் முயற்சிகளுக்குப் பக்க பலமாக இருக்கும் பணபலம் வேண்டாமா?
அரசியல் தலைவர்களிலிருந்து சாதாரண குடிமக்கள் வரை. ஆவலோடு செயலாற்ற விழைந்த போதும் தங்கள் நாடு மீண்டும் பெரும் புகழ் அடையப் போகிறது என்பதை. புரிந்தபோதும் கொண்ட மகிழ்ச்சியான து. தங்களது நாடு: பொருளாதார வளத்தில். செழிப்பில் முன்போல் இல்லை என்று அறியத் தொடங்கியதும் நாட்டினர் துவண்டு போயின ர். ஆகவே, ஒலிம்பிக் பந்தயத்தை வேறு எங்கேயாவத நடத்திவிட்டால்கூட பரவாயில்ளாஈ என்ற நிலை அங்கே எழத் தொடங்கியது. ஒரு சமயம் இதை ஹங்கேரியில் நடத்தி விடலாமா என்றும் யோசனை செய்யும் அளவுக்கு அவர்கள் முயற்சி தொடர்ந்தது என்ருலும், கிரேக்கர்கள் தங்கள் கொண்ட ஆர்வத்தில் சிறிதம் குறையாமலே வேறு வழிகளை ஆராயத் தொடங்கினார்கள்
பியரி கூபர்டின் தன் எண்ணம் தான் நிறைவேறப் போகிறதே என்ற நிம்மதியாக உறங்கவில்லை. நிலையை உணர்ந்துகொண்டு ஒலிம்பிக் பந்தயத்திற்கான முன்னேற். பாடுகளைக் கவனிக்கக்கூடிய பல கூட்டமைப்புக்களைக் கூட்டினர். அதிர்ஷ்டவசமாக. அவருக்கு கிரேக்க நாட்டு இளவரசர் கான்ஸ்டான்டின் அவர்களுடன் தொடர்பு கிடைத்தது. அவரையே ஒலிம்பிக் பந்தயம் நடத்துகின்ற கழகத்தின் தலைவராக இருக்கச் செய்தார் அந்நாட்டு முன்னால் மேயர் , பிலமின் என்பவரை செயலாளராக ஆக்கி காரியங்களை விரைவாகச் செயல்படுத்தச் செய்தர்.