பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ஒணிவளர் விளக்கு

டும். இறைவனே விளக்கைப் போன்றவன்; அவனிடத்தி லிருந்து பரவுவது அறிவொளி. ஞானக் கண்ணேப் பயன் பெறவைக்கும் ஒளி விளக்காக இறைவன் இருக்கிருன்.

புற இருக்ளப் போக்கும் விளக்கு, எண்ணெய், திரி என்பவை குறைந்தால் மங்கிவிடும். மின்சார விளக்கோ மின்சார சக்தி இல்லாமற். போனலும், பல்பு கெட்டுப் போனலும் எரியாது. எந்த விளக்கானலும் எரிய எரியச் சக்தி குறைந்துகொண்டே வரும். ஆனல் மாயை இருளேப் போக்கி ஞானக் கண்ணேப் பார்க்க வைக் கும் இறைவனகிய விளக்கின் ஒளி மேன்மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும்.

ஒளிவளர் விளக்கே !

எப்படி அது வளர்கிறது?

நாம் வைக்கும் விளக்குக்கு இட எல்லே உண்டு. ஓர் அறையில் வைத்தால் அடுத்த அறைக்குத் தெரியாது. எத்தனை தான் பிரகாசமாக இருந்தாலும் சில மைல் துாரத் துக்குத்தான் தெரியும்; அப்பால் தெரியாது. ஆனல் இறைவனகிய விளக்கு எல்லா இடத்திலும் ஒளியைப் பரப்பி வளர்வது. இட எல்லே அதற்கு இல்லை.

புற இருளைப் போக்கும் விளக்குக்குக் கால எல்லேயும் உண்டு, விளக்கு கிறைய எண்ணெய் போட்டு வைத்தா லும் சில மணி நேரமே எரியும். ஆண்டவன் அத்தகைய வன் அல்லன். அவன் எந்தக் காலத்திலும் மேன்மேலும் ஒளி வளர்ந்துகொண்டிருக்கும் விளக்கு.

- ★ -

இறைவன் எந்தக் காலத்திலும் அழியாத சித்தியப்

பொருள். நாம் காணும் பொருள்களிற் பல, நெடுங்காலம் இருப்பனவாகத் தோன்றுகின்றன. நம் முன்னேர்கள்