பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 ஒளிவளர் விளக்கு

செற்றவர் புரங்கள் செற்றனம் சிவனைத்

திருவீழி மிழலைவிற் றிருந்த

கொற்றவன் தன்னக் கண்டுகண்டு உள்ள ம்

குளிரஎன் கண்குளிர்ந் தனவே.

(கற்றவர்கள் விழுங்கும் கற்பகக்கனி போன்றவனே, கரையில்லாத கருணையிற் பெரிய கடலேப் போன்றவனே, அன்பு இல்லாத மற்றவர்கள் அறியாத மாணிக்கமலே போன்றவனே, தன்னே மதித்து அன்பு செய்பவர் மனத்தில் ஒளிவிடும் மணி விளக்குப் போன்றவனே, மக்களே அழித்த அசுரர்களின் மூன்று புரங்களே அழித்த எம்முடைய சிவபெருமானே, திருவீழி மிழலை யென்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனைக் கண்டு கண்டு என் உள்ளம் குளிர, என் கண்களும் குளிர்ந்தன.

செற்றவர் . அழித்தவர்; பகைத்தவர் என்றும் சொல்லலாம்.)