பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேர்த்து வைக்கிறவன் - 31

அந்த கிலையில் இருந்தவராகத் தம்மைப் பாவித்துக் கருவூர்ச் சித்தர் பாடுகிருர்.

கண்பனி அரும்பக் கைகள் மொட் டித்து,"என்

களைகனே ! ஒலம்”என்று ஒலிட்டு என்பெலாம் உருகும் அன்பர்தம் கூட்டத்து

என்னேயும் புணர்ப்பவன்.

(பனி - நீர்த்துளி. மொட்டித்து - குவித்து. களைகணே - துன் பத்தை நீக்குபவனே. ஒலிட்டு கதறி. புணர்ப்பவன் சேர்த்து வைப்பவன்.)

இப்படிக் கருணைபுரிபவனுடைய இருப்பிடம் இன் னது என்று சொல்ல வருகிருர். நடராசப் பெருமான் இப்படிச் செய்தானம். அவன் எழுந்தருளியிருக்கும் இடம் திருச்சிற்றம்பலம். சிதம்பரமாகிய பெரும்பற்றப் புலியூரில் உள்ளது திருச்சிற்றம்பலம். பொன்னல் வேய்ந்த அம்பலம் அது. அதைப் பார்த்தாலே, எவ்வளவு லக்ஷ்மீகரமான இடம்!" என்று தோன்றும். திரு வளர்கிற இடம் அது. பொருட் செல்வம் கிடக்கட்டும். அருட் செல்வமாகிய திருவும் அங்கே வளர்கிறது அல்லவா? அத னைப் பெறத்தானே அன்பர்கள் போகிருர்கள்? *

நடராசப் பெருமானுக்கு அழகிய திருச்சிற்றம்பல முடையான் என்பது ஒரு திருநாமம். திருச்சிற்றம்பலம் அழகுக் காட்சியோடு திகழ்கிறது. அது அமைந்துள்ள பெரும்பற்றப்புலியூர் எப்படி இருக்கிறது? அதுவும் அழகு மலிந்த ஊர். அந்த அழகைச் சொல்லுகிருர் கருவூர்ச் சித்தர்.

ஊரைச் சூழ்ந்து பல சோலைகள். சோலை நிழல் தரு கிறது; கனி தருகிறது. மலர்கள் மலர்ந்து எங்கும் ஒரே