பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தித்திக்கும் திருவுருவம் 71

தியாகராசப் பெருமான் தேவலோகத்தில் இந்திர அடைய வழிபடு தெய்வமாக இருந்து, பின்பு முசுகுந்தச் சக்கரவர்த்தியில்ை பூவுலகத்துக்குக் கொண்டு வரப் பெற்றவன். அந்தப் பெருமானுடைய திருவருளேப் பெற்று, அவனுடைய திருவுலாக் காட்சியைச் சேவித்து இன்ப முறும் பெரும் பேற்றைத் தேவர்கள் இழந்துவிட்டார்கள். அந்தப் பெருமானத் திருவாரூரில் கண்டு, உலகத்துப் பக்தர்கள் எல்லாம் இப்போது இன்புறுகிருர்கள்.

இந்த நினைவு காடநம்பிக்கு வந்தது. தேவர்களுக்கு இந்தப் பெருமானுடைய பேரழகு தெரிந்திருந்தால் இவனேக் கைவிட்டிருப்பார்களா? இப்போது அன்பர்கள் அநுபவிக்கும் இன்ப துகர்ச்சி எள்ளளவாவது அவர் களுக்குத் தெரிய வருமா? அந்தோ பாவம் ! அவர்கள் பெறுதற்கரிய இவ்வின்பத்தை இழந்துவிட்டார்களே! என்ற கினேவு வங்தது. அவர்களைப் பார்த்து, 'பாக்கிய மில்லாத தேவர்களே! இந்தப் பெருமானுடைய அழகை முன்பு நீங்கள் காணவில்லையா? இங்கே வந்து பாருங்கள். பக்தர்களுடைய அதுபவப் பொருளாய் கடம் குலாவும் இவனைப் பாருங்கள்" என்று சொல்லத் தொடங்கினர்.

இறைவனுடைய திருவுருவத்தைத் திருக்கோயிலில் யாவரும் காணலாம். ஆனல் அந்த உருவத்தைக் கண்டு மனம் உருகும் சில எல்லோருக்கும் வராது. தன் காதலனைப் பிரிந்து சில நாள் பிறந்த வீட்டில் தங்கும் பெண்ணுக்கு அவனிடமிருந்து வரும் கடிதம் இன்பத்தை உண்டாக்கு கிறது. அதற்குக் காரணம் அவள் உள்ளத்தில் உள்ள காதல்தான். வேறு யாரேனும் கடிதம் எழுதினால் அது அவளுக்கு அத்தனே இன்பத்தைத் தருவதில்லை.

இறைவனுடைய திருவுருவங்களும் பக்தி என்னும் உணர்வுடையவர்களுக்கு.இன்பத்தை உண்டாக்கும். அவ்