பக்கம்:ஓங்குக உலகம்.pdf/116

From விக்கிமூலம்
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஊர்ப் பெயர்களின் உருமாற்றம் 113 அவர்கள் மதியார் என்பதையும் இப்பெயர்கள் காட்டு கின்றன. - இன்னும் சில ஊர்கள் தமிழ்நாட்டில் புதிய பெயர் களைப் பெற்றுள்ளன. அவ்வாறு அவை பெறுதற்கு அமைந்த காரணங்களை ஆராய்த்து காணல் அறிஞர் கடனாகின்றது. திருவூறல் தக்கோலமாகவும், திருவிற் கோலம் கூவமாகவும், திருநணா பவானி'யாகவும், திருவலிதாயம் பாடி'யாகவும், திருக்கடிகை சோளிங்க புரமாகவும், புள்ளமங்கை பசுபதி கோயிலாகவும், துருத்தி குத்தாலமாகவும் மாறியுள்ளன. இவற்றுள் ஒரு சிலவற்றின் காரணம் வெளிப்படையே. எனினும் இவ்வாறு நாட்டில் எண்ணற்ற ஊர்கள் உண்மையின், இவை பற்றிய தனி ஆய்வு தேவை. இடைக்காலத்தில் சமய மாறுபாட்டால் சில ஊர்ப் பெயர்கள் உருமாறின. காஞ்சியை அடுத்த பல ஊர்களில் அக்காலத்தில் சீவரத்தார் ஆகிய சமணர்கள் வாழ்ந்திருந் தனர். அவர்கள் சிறக்க வாழ்ந்த ஊர்கள் சில. அவை 'சீவரம், எனவும் பழைய சீவரம் எனவும் வழங்கப் பெற்றன. பின்வந்த சைவர்கள் தம் ஊராக்கிக் கொள்ளக் கருதி, சீவரத்தைச் 'சிவபுரமாக்கினார். எனினும் பின்வந்த மகமதிய மன்னன் தன் மனைவியின் பெயரால் அதை வாலாஜாபாத் என வழங்கினன். ஆனால் அவ்வூரைச் சுற்றியுள்ள மக்கள் இன்றும் அதைச் 'சீவரம்’ எனவே அழைப்பது எண்ணற்குரியது. இவ்வாறே திருச்சி மாவட்டத்தில் திருத்தவத்துறைக்கு, லால்குடி என்னும் புதுப்பெயரை மகமதியர்கள், தம் செம்பதுமை’ எனப் பொருள்கொண்ட பாரசீக மொழிப் பெயரை இட்டு அழைத்தனர். இவ்வாறு மாறிய ஊர்கள் இன்னும் சில. உசேன் ஊர், சாயர்புரம் போன்று பிற்காலத்தில்