பக்கம்:ஓங்குக உலகம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காகிதம் ......... சீன நாட்டின் பங்கு

135


அமைந்தபோதிலும், அச்சுக் கலையில் தோற்ற நாள்வரை பல படிகள் பெறவும் பெருவாரியாக வழங்கவும் வசதி இல்லாமற் போயிற்று. சீனாவில் முதல் நூல் யாரால் எக்காலத்தில் அச்சிடப் பெற்றதென்பது உறுதியாகப் பெறக் கூடவில்லை. இக் கலையின் தொடக்கம் மெல்ல மெல்ல வளர்ச்சியடைந்திருக்க வேண்டும். சமயத் தலைவர்களிடமுள்ள சமயத் துறையினை விளக்கும் தூய சமயநூல் படிகளின் தேவை கருதி, அச் சமயநெறி வளர்த்த மெய்யன்பர்கள் பெருமுயற்சியினாலும், பொதுவாகப் பலர் கூட்டு உழைப்பாலுமே இக் கலை தொடக்கத்தில் வளர்ச்சி பெற்றிருக்கவேண்டும். சீன நாட்டில் படிஎடுக்கும் அச்சுக் கலைத்திறன் தோற்றத்துக்குமுன் நீண்ட வரலாறே உள்ளது. தொடக்கத்தில் களிமண்ணிலும் பின் காகிதத்திலும் இலச்சினைகொண்டு முத்திரை இடப்பெற்றமையும் துணியிலும் தாளிலும் பல்வேறு வேலைப்பாட்டு இயல்பினைப் பதித்துப் படி எடுத்தமையும், கல்வெட்டுகளிலிருந்து மை கொண்டுபடி எடுத்தமையும் அந்த நீண்ட வரலாற்றின் கூறுகளாகும். இவையனைத்தும் பின் மர அச்சுப் பயன்படுத்தப் பெற்றமைக்கு வழி வகுத்தன என்பது பொருந்தும்.

கி.பி. ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டின் தொடக்கமே சீனாவில் முதன்முதல் அச்சுத் தொடங்கிய பழங்காலமெனக் கொள்ள இடமுண்டு. கொரியாவில் 1965ல் கண்டுபிடிக்கப்பெற்ற, கி.பி. 751க்கு முன் அச்சிடப் பெற்ற சீன மொழியிலுள்ள புத்த சமய மறைமொழியும் அதற்குமுன்பே அறியப்பெற்று, சுமார் கி.பி. 770ல் ஜப்பான் நாட்டில் சீன மொழியில் அச்சிடப் பெற்ற மறைமொழியும் அச்சுக் கலை அக்காலத்திலேயே தெளிவு பெற்றதாகவும் பரவி நின்ற கலையாகவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/138&oldid=1127729" இலிருந்து மீள்விக்கப்பட்டது