பக்கம்:ஓங்குக உலகம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

ஓங்குக உலகம்


சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவற்றில் இவ்விழாக்களின் சிறப்புப்பேசப்பெறுவதன்றி, பின் எழுந்த பல சமய இலக்கியங்களாகிய உலா, கோவை, பிள்ளைத்தமிழ், குறவஞ்சி, பள்ளு போன்றவையும் இவ்விழாக்களைப் பற்றி விளக்குகின்றன. மணிவாசகர், ஆண்டாள் போன்ற அடியவர் பெண்கள் விளையாட்டு வகைகளை விழாக்களாகவே பாடிப் பரவுவர்.

இன்று முன் காட்டியபடி தனிமனிதவிழாவாக-சமுதாய விழாவாக-சமய விழாவாக - நாட்டு விழாவாக-உலக விழாவாக (ஐக்கிய நாட்டு UNO விழாக்கள்) விளையாட்டு விழாவாக (ஒலிம்பிக் போன்றவை) பல்கிப் பெருகிய நிலையில் விழா பலவகையில் விரிவடைந்துள்ளது. அதே வேளையில் நம் பழம் பெரும் இலக்கியங்கள் காட்டிய விழாக்கள் அனைத்தும் தொடர்ந்து இன்றுவரை நடைபெற்று வருவதையும் காண்கிறோம். மனித இனம் ஒன்றுபட, இணைந்து நலம் பெற, வேற்றுமை நீங்க, பசியும் பிணியும் அகல, எல்லாரும் எல்லாச் செல்வமும் பெற்று எழிலுற்று வாழ, உயிரினம் இன்பம் துய்க்க இந்த விழாக்களே அடிப்படை என்பதை யாரும் மறைக்க முடியாது; மறுக்கவும் முடியாது.

—(1975)

சான்றுகள்-

1. தொல்காப்பியம் 2. புறப்பொருள் வெண்பாமாலை 3. சங்க இலக்கியம் 4. காப்பியங்கள் 5. தேவாரம் 6. திருவாசகம் 7. பிற்கால இலக்கியங்கள் பிற.

Ref 1. Encyclopeadia Britanical xlv Edition Vol. 9
2. Castes and Tribes of South India, Thurdston
3. Etymdological Dictionary by T. Burrow & M 3, Emeneau


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/35&oldid=1135770" இலிருந்து மீள்விக்கப்பட்டது