பக்கம்:ஓங்குக உலகம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

ஓங்குக உலகம்


அந்தியில் ஞாயிறு அமரும் கோலத்தையும், பறவைகள் பறந்து செல்வதையும் கால்நடைகளின் மணி ஓசையையும் காணுங்கள்; கேளுங்கள், நீலவானில் வெண்திங்கள் தோன்றித் தண்ணிலவு பொழிவதை நோக்குங்கள். அந்நிலவு பசுமைக் கானிலும் பைங்கூழிலும் வெண்மணலினும், நீலக்கடலினும் படிந்து வழங்கும் அழகுக் காட்சியில் மூழ்குங்கள். மூழ்கி இன்புற்று, மலையினின்று இழிந்து வென்றி அடல்விடைபோல் நடந்து வீடு செல்லுங்கள். இவ்வாறு இயற்கைக் கழகத்தில் பயின்று பயின்று, சங்கப்புலவர், இளங்கோ, திருத்தக்க தேவர், திருஞானசம்பந்தர், ஆண்டாள், சேக்கிழார், கம்பர், பரஞ்சோதி முதலியோர் இயற்கைக் கோலத்தை எவ்வாறு எழுத்தோவியத்தில் இறக்கியிருக்கிறார் என்று ஆராயுங்கள். பழைய கோயில்களிலும் மன்றங்களிலும் நுழைந்து, இயற்கைத் திருக்கோலத்தைச் சிற்பர் எவ்வாறு ஓவியங்களில் வடித்திருக்கிறார் என்பதையும் உணர ஓவியங்களை ஊன்றி நோக்குங்கள். நந்தமிழ்க் காவியங்களும் ஓவியங்களும் இயற்கை அமிழ்தாய் உயிரையும் உடலையும் ஓம்புவதை உணர்வீர்கள். என்பது அவர் அறிவுரை.

மொத்தத்தில் தமிழ்த் தொண்டனாக-தொழிலாளர் தொண்டனாக-நாட்டுத் தொண்டனாக - உலகத் தொண்டனாக-ஏழை எளியவர் தொண்டனாக-எல்லாருக்கும் நல்லவனாக-உர உளத்தில் வல்லவனாக-திரு.வி.க. அவர்கள் வாழ்ந்தார்கள் என்பது உண்மை. அவர் வாழ்ந்த வீட்டின்பின் இருந்த வேப்பமரம் வாய் இருந்தால் அனைத்தையும் சொல்லும். பெரியார், வரத ராஜுலு நாயுடு, ராஜாஜி தொடங்கிப் பல அரசியல் தலைவர்கள், அனைத்திந்திய தொழிலாளர் தலைவர்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/65&oldid=1127509" இலிருந்து மீள்விக்கப்பட்டது