பக்கம்:ஓங்குக உலகம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

ஓங்குக உலகம்


பொருளையெல்லாம் நாட்டு மக்கள் வாட்டம் தீர்க்கும் அறப்பணிக்கே செலவிட்டார்கள். அவ்வாறு செலவிடும் நெறிக்கு உறுதி அளிக்கும் அவர்தம் உயிராவணத்தை (வில்) 1794ஆம் ஆண்டு மார்ச்சு 22ஆம் நாள் எழுதி முடித்தார். எனவே, இந்நாள், அறநிலைய ஆட்சிப் பொறுப்பினராகிய எங்களுக்கு மட்டுமன்றி-அவர்தம் கல்வி நிலையங்களின் வழியே ஆண்டுதோறும் எண்ணற்ற பயன்பெறு மாணவர்களுக்கு மட்டுமன்றி-அறக்கட்டளைகளால் நலம் பெறுவாருக்கு மட்டுமன்றி-நாட்டுக்கே நல்ல நாளன்றோ? ஆம்! இத்தகைய அறநெறியை-சன்மார்க்க சத்திய நெறியைச் சமுதாயத்துக்கு விளக்கி, பெற்றதை மற்றவர்களுக்கு அளித்து, இறந்தும் என்றும் இறவாத புகழ் பெற்ற பச்சையப்பர் விருப்பாவணம் எழுதி வைத்த இந்த நாள் நல்ல நாளேயாம்!

காஞ்சிபுரத்தைச் சார்ந்த எளிய குடும்பத்தில் தந்தை விசுவநாத முதலியாருக்கும் தாய் பூச்சியம்மாளுக்கும் 1754இல் இவர் பிறந்தார். பச்சையப்பர் கருவில் வளரும் காலத்திலேயே தந்தையாரை இழந்தமையின், அவர் தாயார் ஏழ்மைக்கிடையில் காஞ்சியை விட்டுப் பெரியபாளையம் சேர, அங்கேயே நம் வள்ளல் பிறந்தார். பின் அங்கும் நிலைத்து வாழ முடியாவகையில் சென்னையை நாடினார். சென்னையில் அக்காலத்தில் சிறப்புற வாழ்ந்த இருமொழி அறிந்த (துவிபாஷி) தரகராய் வாழ்ந்த பவுனி நாராயணப் பிள்ளை அவர்களே பச்சையப்பர்தம் குடும்பத்தை ஏற்றுப் பாதுகாத்ததோடு, பிற்காலத்தில் அவர் வாழ்வையும் வளமுறச் செய்தவராவர்.

இளமையிலேயே பவுனி நாராயணப் பிள்ளையுடன் பழகி, தாமும் ‘துவிபாஷி’யாகி, ஆங்கிலக் கல்வி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/79&oldid=1127567" இலிருந்து மீள்விக்கப்பட்டது