பக்கம்:ஓங்குக உலகம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க பச்சையப்பர்

77


கணக்கறிவு இவற்றுடன் சிறந்து, பச்சையப்பர் பல பண்டங்களை வாங்கியும் விற்றும் வாணிபத் துறையில் தேர்ச்சியுற்றார்; பதினாறு வயதிலேயே நல்ல வருவாய் பெற்றார். எனினும் எதிர்பாராத விதமாக யாரிடமும் சொல்லாமல் பச்சையப்பர் ஆங்கிலேயர் படையில் சேர்ந்துவிட்டார். ஆனாலும் அவரை ஆதரித்த பவுனி நாராயணப் பிள்ளை தம் செல்வாக்கைப் பயன்படுத்தி, அவரை மீட்டு, தாம் ஆற்றிவந்த ‘துவிபாஷி’ப் பணியிலேயே, ‘நிகோலஸ்’ என்ற ஆங்கில வணிகரிடம் அமர்த்தினார். அந்த வாழ்க்கைத் திருப்பமே வையத்தில் பல்லாயிரக்கணக்கான ஏழை மக்களை வாழ வைக்கும் நல்ல திருப்பமாக அமைந்துவிட்டது.

பச்சையப்பருடன் பிறந்த தமக்கையர் இருவர்; அவர்கள் மணம் புரிந்து வாழ்ந்து வந்தனர். பச்சையப்பர் தம் தமக்கை மகளான அய்யாரு அம்மையை மணந்து - வாழ்ந்தார். எனினும் மகப்பேறு இன்மையின் பின்னர், திருமறைக்காட்டினைச் சேர்ந்த பழநியம்மாளை இரண்டாம் தாரமாக மணந்தார். இரண்டாம் மனைவிக்குப் பெண் குழந்தை பிறந்தது. எனினும் இவருடைய அந்த இரண்டாம் மனைவியும் மகளும் இறந்துவிட்டனர். முதல் மனைவியார் இவர் விருப்ப ஆவணம் செயல்பட ஆவன செய்தார்கள்.

பச்சையப்பருக்கு இளமையிலேயே அற உணர்வும் சமய ஈடுபாட்டுணர்வும் மிகுதியாக இருந்தன. இளமையிலேயே-இருபதாவது வயதிலேயே-தம் சொந்த ஊராகிய காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டுள்ள-ஏகாம்பரநாதருக்குப் பல திருப்பணிகள் செய்தார்-திருமண மண்டபம் கட்டினார்-கும்பாபிஷேகம் செய்ய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/80&oldid=1127570" இலிருந்து மீள்விக்கப்பட்டது