பக்கம்:ஓங்குக உலகம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாட்டுக்குழைத்த நல்லவர்

89



கற்றாரும் மற்றாரும் போற்றும் வகையில் ஆட்சிப் பணிகளுக்கு இடையில் அரிய கட்டுரைகளையும் கவிதைகளையும் நாள்தொறும் வடித்துத் தந்துகொண்டிருக்கும் கலைஞர் செயலே அவர் தமிழ் உள்ளத்தினைத் தெள்ளத் தெளியக் காட்டுகின்றது. இன்னும் தமிழ் நாட்டுக்கும், தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் செய்ய வேண்டிய தொண்டுகள் பல தமிழ் மொழியை உலகம் உணர்ந்து போற்றத் தொடங்கிவிட்ட போதிலும் அதன் ஏற்றம் முற்றும் போற்றப் பெறவில்லை தமிழ் வாழ்வு ஏற்றம் பெறவேண்டிய அளவு முற்றும் உயரவில்லை. தமிழகம் ‘நாடென்ப நாடா வளத்தன’ என்ற வள்ளுவர் வாக்குக்கு முற்றும் இலக்காகவில்லை. கலைஞர் அவர்கள் இன்னும் முயன்று, நாட்டில் உலகில் நம் தமிழை-தமிழரை-தமிழ்நாட்டை எல்லா வகையிலும் ஏற்றம் பெறுமாறு காண ஆவன செய்வார்கள் என்ற நம்பிக்கையுடையேன். அவர்தம் திறன்மிகு செயலால், பாட்டால், எழுத்தால் தமிழ்நாடு-மொழி-மக்கள் அனைத்தும் நலம் பெறும் என்ற துணிவோடு. கலைஞர் அவர்கள் செயலும் திறனும் காலம் வென்று அவரை வாழ்விக்கும் என்ற உணர்வோடு, அவர்தம் ஆக்கப்பணிகள் சிறக்க என்ற வாழ்த்தோடு என் உரையை முடித்துக்கொள்கிறேன்.

பேச்சு—1972


14. நாட்டுக்குழைத்த நல்லவர்


திரு மீ. பக்தவத்சலம் அவர்களை நான் இளமை முதலே அறிவேன். நான் செங்கற்பட்டில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது ‘இந்திய வாலிபர் சங்கம்’ அமைத்துத் ‘தீண்டாமை விலக்கு’, ‘மது விலக்கு’ போன்ற

ஓ.—6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/92&oldid=1135820" இலிருந்து மீள்விக்கப்பட்டது