பக்கம்:ஓடி வந்த பையன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4
'காணவில்லை'

அந்த ஹோட்டலிலே மிகவும் பரபரப்பான பொழுதல்லவா அது! -

கல்லாவில் 'கனபாடி' கங்காதரம்-அதாவது, கோபுவின் தகப்பனார் வீற்றிருந்தார். உச்சியில் சுற்றிய காற்று அவருக்குப் போதுமா? -போதாது. ஆகவே, கையிலும் ஒரு விசிறி மட்டையை வைத்திருந்தார். பில்களைப் பார்த்துப் பணம் வாங்கிப் போட்ட நேரம் போக, ஒழிந்த வேளையில் அவரது கை அவ்விசிறியை நாடும்; முதுகு அரித்தாலும் விசிறி அவருக்குக் கை கொடுப்பதும் உண்டு.

‘வைரக் கடுக்கன் அறுபது காசு!’ என்ற குரல் உள்ளேயிருந்து கேட்டது.

குரல் ஈந்தவன் மாஸ்டர் மணி.

ரொம்பத் துடி! -

இல்லையென்றால் புளித்துப்போன ஒரு பழைய ஹாஸ்யத்தை இத்தனை தைரியமாகச் சொல்லி ஒப்பிக்கக்கூடுமா?

ஹோட்டல் அதிபர் வைரக் கடுக்கனை எடை போட்டாரோ, அதைப் போட்டிருந்த நபரை எடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓடி_வந்த_பையன்.pdf/28&oldid=1163073" இலிருந்து மீள்விக்கப்பட்டது