பக்கம்:ஓடி வந்த பையன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

உமைபாலன் தடுமாறிப்போனான். காற் சட்டையிலிருந்த தாளைப் பிரித்தான். அதில் பிரசுரமாயிருந்த காணவில்லை விளம்பரப் பகுதியைக் காட்டினான்.

"இந்தாப் பாரய்யா ... இதுதான் நான்... படம் சரியாத் தெரியாது ... இதுதான் என் அப்பா ... பெயர்...செங்காளியப்பன் ... ஊர், காரைக்கால் "மீண்டும் செருமினான் பையன்.

“இதுக்கெல்லாம் என்ன ஆதாரம் ?’ என்று ஓங்காரமாகக் கேட்டான் கிழவன்.

“ஐயோ,கடவுளே !” புரண்டான் உமைபாலன்!

“போடா தள்ளி!” என்று ஆத்திரத்துடன் நெருங்கிய ஐயர், அக்கிழவனை ஒதுக்கித் தள்ளினார்.அருகில் ஒடி வந்த ஜெயராஜை கன்னத்தில் அறைந்து நெட்டித் தள்ளினர். கிழவனை மீண்டும் அடிக்கக் கழி ஒன்றை எடுத்தார்.

அப்பொழுது, ஒரு கைவந்து அதைத் தடுத்தது.

திரும்பினர் கனபாடி.

அங்கு, காரைக்கால் செங்காளியப்பன் கண்ணீர் வழிய நின்றார்!

"ஐயா! இந்தக் கிழவரை ஒண்னும் செய்யாதீங்க! ... என் மகன் எனக்குக் கிடைச்சிட்டதுக்கு உண்டான புண்ணியத்திலே இவருக்கும் இந்தப் பெண் பூவழகிக்கும் பங்கு ரொம்ப உண்டு. எல்லாம் நான் நடத்திய நாடகம்...தெய்வம்...என் தெய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓடி_வந்த_பையன்.pdf/52&oldid=1142584" இலிருந்து மீள்விக்கப்பட்டது