பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெருஞ்சித்திரனார்

35'

மிகவும் எளிமையாக புழு, பூச்சியைப்போல் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களின் பின்புலத்தைப் பெறவேண்டும். மக்களின் ஆற்றலாக நம் அறிவு நிலைகளை மாற்ற வேண்டும். வெறும் அறிவுப் போரினால் மட்டுமே அவர்களை நாம் வென்றுவிட முடியாது. அறிவு நிலையிலே நாம் அவர்களோடு போராடுவதானால், அதன் பெரிய பெரிய கருவிகளை, ஆக்கத்தன்மைகளைக் கையிலே வைத்திருக்கின்ற அந்தக் காரணத்தால், உலக நிலையில் நமக்கு ஆதரவாக, பல வரலாறுகளை நாம் அமைத்துக்கொள்ள முடியும். வெறும் அறிவுப் போராட்டம் அன்று, நாம் போராடப்போவது. மக்கள் ஆற்றல் போராட்டமாக இருக்க வேண்டும்; மக்கள் புரட்சியாக மலர வேண்டும், அந்த நிலைகளுக்குத்தான் ஒரு விடிவு உண்டு என்பதை மறந்து விடக்கூடாது.இளைஞர்களுக்கும் நான் சொல்லிக்கொள்ளுவதும் அதுதான். ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக அவர்கள் உணர்ந்துகொண்டு, வெளிநாட்டுப் போராட்ட நிலைகளைக் கருத்தில்கொண்டும், ஏதோ ஒரு நிலையில் , ஏதோ ஒரு கருவியைக் கையில் எடுத்துக்கொண்டு, உடனடியாக, எவ்வகைப் போராட்டத்திலும், கருவிப் புரட்சியில், இறங்கிவிடுவோம்.அதில் வென்றெடுத்துவிடுவோம் என்று கூறிவிட முடியாது .அவர்களைப் போல. உணர்வுள்ளவர்களைத் தந்தை பெரியாரின் காலத்திலே, நாங்களெல்லாம் இளைஞர்களாக இருந்தபோது, எத்தனையோ கூட்டங்களைப் பார்த்திருக்கிறோம்

வளர்ந்து வடிவெடுத்த தி.மு.கவின் நிலை என்ன?

அந்த இளைஞர்களின் கூட்டம்தான் பின்னால் தி.மு.க.வாக வடிவெடுத்தது. ஆனால் என்ன நடந்தது: பெரிய அளவிலே வளர்ந்த இருபது இலக்கம் உறுப்பினர்களை வைத்திருக்கிற பெரிய அரசியல் கட்சியாக