பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

ஓ ! ஓ ! தமிழா்களே !

இருந்தாலும் கூட, அதற்கு முதுகெலும்பு இல்லாத, வலுவில்லாத ஒரு வீரமற்ற நிலையிலேதான் அதை அரசியலிலே பார்க்கிறோம்; ஏன்? அப்படி வந்தால் ஆட்சிக்கு வருபவர்கள் அத்தனைப் பேருக்கும் அதிகார ஆசையும், பதவி ஆசையும் தோன்றிப் பொருள் ஈட்டத்திலேயே அவர்களுடைய நாட்டங்களெல்லாம் கொண்டு செலுத்தப் பெற்று, இந்த இனத்தின் தன்மைகளையே மறந்து, அவர்கள் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கின்ற அந்தச் செல்வ வாழ்க்கையைத்தான் சுவைத்துக் கொண்டு, யார் யார் அவர்களிடத்தில் போனார்களோ, அவர்களிடம் சென்றால் அமைச்சர் பதவி கிடைக்குமா என்று அலைகின்ற காட்சியாகத்தான் அரசியலிலே அதைப் பார்க்கின்றோம். அரசியலில் வாய்ப்பில்லை என்று சொன்னால், அடுத்தநிலை, இளைஞர்கள் படங்களிலே, திரைப்படங்களிலே ஈடுபட்டு விடுகிறார்கள்: அந்த நிலையில் திரைப்படங்களிலே போய், அவர்கள் பாடலாசிரியர்களாகவும், கதையாசிரியர்களாகவும், இயக்குநர்களாகவும். படப்பிடிப்பாளர்களாகவும் பெரிய அளவிலே வளர்ந்து, பெருமைப் பெற்றுவிட முடியும் என்று நினைக்கிறார்கள்

வளர்ந்துவிட்ட மற்றவர்கள் நிலை என்ன?

இசையிலே மிகச் சிறந்த திறமை படைத்த இளையராசா என்ன ஆனார்? கோடிக் கோடியாகச் சம்பாதித்தார். கடைசியிலே பார்ப்பனீயத்துக்கு அடிமைப்பட்டார். அதேபோல நடிகர்கள் என்ன ஆனார்கள்? கோடிக் கோடியாகச் சம்பாதித்தார்கள். நன்றாக நினைத்துப் பார்க்க வேண்டும். நம்மின நடிகர்கள் ஓங்கிய நிலையிலே நடிப்புத் திறனிலே இருந்தவர்கள், இருக்கின்றவர்கள் என்ன ஆனார்கள்? ஆரியத்துக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள் அதேபோல வேறு