பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

ஓ ! ஓ ! தமிழர்களே !

இலங்கையிலே ஏறத்தாழ 86 கூட்டங்கள், கிழக்கு ஆசிய நாடுகளான மலேசியா, சிங்கை நாடுகளுக்கு இரண்டு முறை சென்றுள்ளேன். ஏறத்தாழ 80, 90 கூட்டங்கள். இங்கே தமிழகத்திலே ஒவ்வோர் ஊரிலும் கடந்த 35. ஆண்டுகளாக எத்தனையோ நிகழ்ச்சிகள், அரங்க நிகழ்ச்சிகள்! (எந்த விளைவும்) நடக்கவில்லையே; அறிஞர்கள் வளர்ந்தார்கள். உண்மையாகவே தமிழறிவு பெற்றார்கள் தமிழின உணர்வை, தமிழ்நாட்டுணர்வைப் பெற்றார்கள். ஆனால் நிலை என்ன? இன்னும் பேசிக் கொண்டே இருக்கிறோம்; விளைவு ஒன்றும் இல்லை. -

என் மகனும் இளைஞர்களும் எங்களை விடத் தீவிரம் காட்டுகிறார்கள்

என்னுடைய மகன் என்னைத் தூக்கி எறிந்து விட்டான். நீங்கள் எல்லாம் இவ்வாறு பேசிக்கொண்டே இருப்பீர்கள்: நாங்களெல்லாம் உங்களை நம்புவதற்கு அணியமாக இல்லை; அவர்கள் எப்படி நம்மோடு மோதுகிறார்களோ, நாமும் அப்படி நேரடியாகவே மோத வேண்டும்; அதை எங்களிடத்திலே விட்டுவிடுங்கள், நீங்கள் உங்களுடைய வேலையைப் பார்த்துக் கொண்டு போங்கள் - என்று எங்களையெல்லாம் தவிர்த்து விட்டான் இன்றைக்கு அவர்கள் செய்த ஒரு நிகழ்ச்சியிலேயே அலறி அடித்துக் கொண்டு, ஒரு பெரிய வீழ்ச்சியே எங்களுக்கு ஏற்பட்டு விட்டது.

அதனாலும் பெரிய அளவு தாக்கங்கள் எங்களுக்கு

நாங்களெல்லாம் வெளியிலே துணிவாக முன்புபோல் குழுவாக நடமாட முடியவில்லை. எங்குப் போனாலும் தடைகள், எங்குப் போனாலும் மறிப்புகள். இந்த "உலகத் தமிழின முன்னேற்றக் கழகம்" இந்த மாநாட்டை