பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெருஞ்சித்திரனார்

45

ஈரோட்டிலே இரண்டாவது மாநாடாக நடத்துகிறது என்று சொன்னால், என்னுடைய அருமை நண்பர் அரசமாணிக்கனார் அவர்களை, அவர்களின் துணிவை மிகவும் பாராட்ட வேண்டும் . எது வந்தாலும் உ.த.மு.க வுக்கு ஏற்பட்ட தாக்கங்கள் கடந்த 4ஆண்டுகளாக அதிகத் தாக்கங்கள். எனவே எதுவும் செய்ய முடியாதபடி செய்துவிட்டார்கள். நீங்கள் இதுபற்றி நன்கு சிந்திக்க வேண்டும்

காவல்துறையினர் தமிழகம் முழுவதும் எல்லாத் தென்மொழி அன்பர்களையும், தென்மொழி, தமிழ்நிலம் விற்பனையாளர்களையும் போய் அணுகி, வீடுவீடாகப் பலரிடத்தில் இருந்த தென்மொழி, தமிழ்நிலம் இதழ்களைப் பிடுங்கிச் சென்றுவிட்டனர், பலர் அதனைத் தூக்கி எறிந்தும் விட்டார்கள். தென்மொழி'யைக் கையில் வைத்திருந்தாலே, அவன் ஒரு 'கொடுமையாளன்' (வன்முறையாளன்) என்று கருதிக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, கடுமையான அடி, உதையோடு, தலைகீழாகத் தொங்கப்போட்டுப் பலவகையானா உறுப்புச் சிதைவுகள். (சித்திரவதைகள்) அச்சுறுத்தல்கள், குடும்ப மிரட்டல்கள். அவர்களுடைய பெரும் பொருள் கைப்பற்றப்பட்ட வகையில் இழப்புகள் எல்லாம் ஏற்பட்டுவிட்டன. அக்கொடுமைகளுக்குப் பின்னும் நாங்கள் இன்னும் இருக்கிறோம். இன்னும் எங்கள் முயற்சிகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறோம். இளைஞர்களும் இருக்கிறார்கள், இல்லாமல் போய் விடவில்லை

அதிகார நடவடிக்கைகளால் உரிமைப் போராட்டங்களை ஒடுக்கிவிட முடியாது

இன்றைக்கு ஏதாவது எங்களை மிரட்டிப் பார்க்கலாம்; அடக்கிப் பார்க்கலாம்; அல்லது அச்சு