பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



iv

நிலைக்கும் இடையில், மிகவும் துணிவொடும், ஆர்வத்தொடும், அக்கறையொடும், முழுப் பொறுப்பையும் ஏற்று நடத்திய ஈரோடு மாவட்ட உ.த. மு. க. அமைப்பாளரும், என் பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரியவரும், நெடுநாளைய 'தென் மொழி'த் தொண்டரும், தூய தமிழ்ப் பற்றாளரும், பெரியார் பின்பற்றாளரும் ஆகிய செம்புலவர் மானமிகு திரு. அரசமாணிக்கனார் அவர்களும் , என் மூத்த மகன் திரு.மா.பூங்குன்றன், அறி. இ; க.மு. அவர்களும் ஆவார்கள். அவர்களுக்கு என் நெஞ்சு நிறைந்த நன்றியையும், வாழ்த்தையும், முதற்கண் கூறிக் கொள்கிறேன். மேற்கொண்டு, இத்தகு பணியை அவர்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும் என்றும், அவர்களையும், அவர்களைப் போல் ஆர்வம் மிக்க சிலரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்

இம் மாநாட்டுச் சொற்பொழிவைத் திரு. அரசமாணிக்கனாரே, தமக்குற்ற குடும்ப இடையூறுகளுக்கும், துன்பங்கட்கும் இடையே, ஒலியிழைப் பதிவினின்று பெயர்த்து உதவினார். அதனை, என் இரண்டாவது மகன் திரு மா.பொழிலன், (க.மு.(ஆங்) ஒருமுறைக்கு இரு முறையாகச் சரிபார்த்தும், தெளிவுப்படி எடுத்தும் துணை நின்றார். அவர்களுக்கும். அவ்வகையில் அவர்களுடன் ஒத்துழைத்த என் நான்காம் மருகர் திரு. கி. குணத்தொகையன், க.மு. அவர்களுக்கும் என் வாழ்த்துகள் உரியவாகுக

இச் சொற்பொழிவு நூல், தமிழினத்திற்கென்று, அமைவாக, அதன் தாழ்ச்சி வீழ்ச்சிகளையும், எதிரிகளின் ஆட்சி சூழ்ச்சிகளையும், அவர்களோடுற்ற நம் இன இரண்டகர்களின் கரவு உறவுகளையும், இற்றை